Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரில் செப். 18, செப். 25, அக் 1-ல் சட்டசபை தேர்தல்- ஹரியானாவில் அக்.1-ல் வாக்குப் பதிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 19, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதேபோல ஹரியானாவுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் மாதம் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது.

jammu and kashmir elections bjp politics

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் விசாரணை நடத்தப்பட்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜம்மு காஷ்மீரில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு காஷ்மீரை முடிந்தவரை விரைவாக மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர். எனவே இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டு முழு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்திருந்தது.

முதல் கட்ட தேர்தல்: இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், "90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

2ம் கட்ட தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

3ம் கட்ட தேர்தல்: மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.

மாநில நிலைமை: ஜம்மு காஷ்மீரில் 87 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதில் 3.71 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாக உள்ளனர். நகர்புறத்தில் 2332, கிராமப்புறங்களில் 9506 என மொத்தம் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே, தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தது. இதனை தொடந்து கடந்த 14ம் தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவை இந்திய தேர்தல் அதிகாரிகள் நேரில் சந்தித்து பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

jammu and kashmir elections bjp politics

மக்கள் பங்கேற்பு: பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "ஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாகவுள்ளது, எவ்வித வெளி மற்றும் உள் சக்திகளும் தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முடியாது. ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயக செயல்முறைகள் தொடர, மக்களவை தேர்தலை போன்று விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களின் பங்கேற்பது அவசியம்" என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து இன்று தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாது ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.

ஹரியானா தேர்தல்: ஹரியானாவின் தற்போதைய பாஜக அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஹரியானாவுக்கு அக்.1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.16 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். ஒரே கட்டமாக பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+