தமிழ்நாட்டில் SIR நடவடிக்கை? எப்போது தொடங்கும்? தேர்தல் ஆணையர் கொடுத்த மிக முக்கியமான பதில்
டெல்லி: நாட்டில் வாக்காளர் திருட்டு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே டெல்லியில் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பல்வேறு விளக்கங்களை அளித்தார். மேலும் பீகாரை போலவே மற்ற மாநிலங்களிலும் சார் நடவடிக்கை இருக்குமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
பீகாரில் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஆணையம் சார் நடவடிக்கையை மேற்கொண்டது. இருப்பினும், சார் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துள்ள எதிர்க்கட்சிகள், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். ஆளும் தரப்புக்குச் சாதகமாகவே சார் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர்கள் சாடியுள்ளனர்.

வாக்கு திருட்டு புகார்
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாகச் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் இந்த விவகாரத்தை முன்வைத்து பீகாரில் யாத்திரையையும் தொடங்கியுள்ளார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இருப்பினும், தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தே வருகிறது. இதற்கிடையே இன்று தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்தனர். மேலும், வாக்கு திருட்டு போன்ற வார்த்தைகள் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் விமர்சித்தனர்.
அப்போது பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "இந்திய அரசியலமைப்பின்படி 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வாக்காளராகப் பதிவு செய்து வாக்களிக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவற்றுக்கிடையே பாகுபாடு காட்டப்படுவதில்லை. தேர்தல் ஆணையத்திற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை. அனைவரும் சமம்! எதிர்ப்புகள் வந்தாலும் அரசியலமைப்பு கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்காது" என்றார்.
கடும் தாக்கு
ராகுல் காந்தி பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்த ஞானேஷ் குமார், சில தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலமும், அச்சத்தை உருவாக்குவதன் மூலமும் வாக்காளர்களைத் தவறாக வழிநடத்த முயல்கின்றனர் என்று விமர்சித்தார். மேலும் வாக்கு திருட்டு உள்ளிட்ட வார்த்தைகள் அரசியலமைப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் ஆணையத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே இருக்கின்றன. வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஆகியோருடன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். மாவட்டக் கட்சித் தலைவர்கள் மற்றும் பூத் நிலை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட இந்த ஆவணங்கள் மாநில அல்லது தேசியத் தலைவர்களைச் சென்றடைவதில்லை அல்லது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே புறக்கணிக்கப்படுகின்றன" என்றார்.
மற்ற மாநிலங்களிலும் சார் நடவடிக்கை?
தொடர்ந்து பீகாரில் நடந்து சார் நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், "பீகாரின் சிறப்புத் திருத்த நடவடிக்கை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இதற்காகப் பல்வேறு தரப்பினரும் கடுமையாக உழைத்து வந்துள்ளனர். பீகாரில் உள்ள ஏழு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு ஆதரவாகவே உள்ளனர். ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்தோ அல்லது வாக்காளர்கள் குறித்தோ எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
பீகாரைத் தொடர்ந்து அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் சார் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஞானேஷ் குமார், "மேற்கு வங்கம் உட்பட நாட்டின் மற்ற மாநிலங்களில் சிறப்புத் தேர்தல் நடவடிக்கை எப்போது நடத்தப்படும் என்பதை மூன்று தேர்தல் ஆணையர்களும் இணைந்து முடிவெடுப்போம்" எனப் பதிலளித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications