அரசுகள் இலவசங்கள் வழங்குவது சரியா? தவறா? பரபரப்பாக பேசிய ரகுராம் ராஜன்.. திரும்பும் கட்சிகள்
டெல்லி: தேர்தல் சமயங்களில் அரசில் கட்சிகள் மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது தொடர்பான விவாதம் நீண்டகாலம் நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இலவசங்கள் வழங்குவது என்பது சரியா? தவறா? என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் பரபரப்பாக பேசியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு தேர்தல் வேளைகளிலும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை வழங்குவதாக அறிவிக்கின்றனர். மின்சாரம், அரசி, கோதுமை, சைக்கிள், ஸ்கூட்டி உள்பட பல்வேறு பொருட்களை இலவசமாக தருவதாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் பணம் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மாதம் ரூ.1000, கர்நாடகாவில் மாதம் ரூ.2,000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் விரைவில் காங்கிரஸ் அரசால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுபோன்ற இலவசங்களால் மாநிலங்களின் நிதி நிலைமை என்பது பாதிக்கப்படும். இதனால் இலவசங்கள் வழங்குகவதை அரசுகள் நிறுத்த வேண்டும் என்ற ஒரு தரப்பினரும், இலவசங்கள் என்பது ஏழை மக்களை முன்னேற்ற வழங்கப்படுகிறது. இது போன்ற நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என இன்னொரு தரப்பும் தெரிவித்து வருகின்றன. அதோடு இலவசங்களை வழங்கும் காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளை பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது.
ஆனால் தற்போது நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் அறிக்கையில் பாஜகவும் சில இலவச நலத்திட்டங்களை அறிவித்தது. இதனால் தேர்தல் சமயத்தில் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடலாமா? இல்லையா? என்பது தற்போது தொடர்ந்து விவாதமாகி வருகிறது. இந்நிலையில் தான் அரசு சார்பில் இலவசங்கள் வழங்கலாமா? கூடாதா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது பற்றி ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணரருமான ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது ‛இந்தியா டூடே' சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் இதுதொடர்பாக ரகுராம் ராஜன் கூறியதாவது: இலவசங்கள் என்பது ஏழை குடும்பங்களை இலக்காக கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், பெண்களுக்காக இருக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்குவதற்கும், மக்களுக்கான சுகாதார திட்டங்களுக்காக இது பயன்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற இலவச திட்டங்கள் மூலம் அரசிடம் இருந்து மக்களுக்கு பணம் செலவழிக்கப்படுவது சரியானதாக இருக்கும்.
அதேநேரத்தில் இலவசங்களை வழங்கும்போது நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஏழை மக்களுக்கு நலத்திட்டங்களை இலவசமாக செயல்படுத்துவதில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்ற போட்டியும் ஏற்படுகிறது. இது தான் பிரச்சனையாக மாறுவதோடு, அரசை திவாலாக்கும் வகையிலான செயலாக மாறிவிடும். குறிப்பாக கூற வேண்டும் என்றால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்கள் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் என்பது மோசமான ஒனறாகும். ஏனென்றால் இதனால் ஏற்படும் நிதிச்சுமை என்பது நிச்சயம் அரசை சுமூகமாக நடத்துவதை கடினமாக்கும்.
மேலும் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் திட்டங்களை செயல்படுத்துவதில் சில கட்சிகள் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. இதனால் தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்திய பிறகு மாநில அரசுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் தனி அமைப்புகள் என்பது தேவையான ஒன்றாக இருக்கிறது’’ என்றார்.












Click it and Unblock the Notifications