டிகே சிவகுமாரின் குடும்பத்துக்கு நெருக்கடி.. 80 வயது அம்மா மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்
Recommended Video
டெல்லி: 2017ம் ஆண்டு கணக்கில் வராத ரூ.20 கோடி பணம் சிக்கிய விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கர்நாடாக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் மனைவி மற்றும் அம்மாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் டி.கே.சிவக்குமார் , இவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர்.
காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கர்நாடகாவில் சுமார் இரு ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தவர்.

கணக்கில் வராத பணம்
இந்நிலையில் இவருக்கு சொந்தமான இடங்களில் 2017ம் ஆண்டு வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையில் அவரது டெல்லியில் உள்ள வீடு மற்றும் பெங்களூருவில் உள்ள வீட்டில் இருந்து கணக்கில் வராத சுமார் ரூ.20 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

செப்.3ல் கைது
இதையடுத்து அமலாக்கத்துறையில் டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். இது தொடர்பாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அவரை நான்கு நாட்கள் விசாரணைக்கு பின்னர் செப்டம்ர் 3ம் தேதி கைது செய்தது. தற்போது டெல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அம்மாவுக்கு சம்மன்
இந்நிலையில் ரூ.20 கோடி பணம் சிக்கிய விவாகரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கர்நாடாக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் அம்மா கௌரவம்மா(வயது 80), மற்றும் சிவக்குமாரின் மனைவி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சிவக்குமாரின் அம்மா கௌரவம்மா இன்று ஆஜராக வேண்டும் என்றும், சிவக்குமாரின் மனைவி வரும் 17ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆதாரம் திரட்ட
ஏற்கனவே சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் சிவக்குமாரின் மகனும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான டிகே சுரேஷ் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவிட்டது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக 50க்கும் மேற்பட்டோரை விசாரணைக்காக அழைத்து உள்ளோம் என அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தி டி.கே. சிவக்குமாருக்கு எதிராக ஆதாரங்களை திட்டும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கி உள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications