டெல்லியை சூழ்ந்த இருள்.. காலையிலேயே குழம்பிய பொதுமக்கள்.. வேகமாக பரவும் எத்தியோப்பியா எரிமலை சாம்பல்
டெல்லி: எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஹெய்லி கூப்பி என்ற எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட சாம்பல் மேகங்கள் பல ஆயிரம் கிமீ தூரத்திற்குப் பரவி வருகிறது. அந்த எரிமலை ராஜஸ்தான் வழியாக இந்தியாவில் நுழைந்த நிலையில், இப்போது இப்போது தலைநகர் டெல்லியை எட்டியுள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிக இருள் சூழ்ந்து டெல்லி காணப்பட்டது.
பூமியில் பல ஆயிரம் எரிமலைகள் இருக்கின்றன. சில எரிமலைகள் ஆக்டிவாக எரிமலை பிழம்பைக் கக்கும்.. அதேநேரம் பல நூறு எரிமலைகள் எப்போதும் அமைதியாகவே இருக்கும். அப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை ஒன்று தான் இப்போது வெடித்துச் சிதறியுள்ளது.

ஹெய்லி கூப்பி எரிமலை
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ஹெய்லி கூப்பி என்ற எரிமலை இருக்கிறது. எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இந்த ஹெய்லி கூப்பி எரிமலை, சுமார் 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெடித்துள்ளது. இத்தனை காலத்திற்குப் பிறகு அந்த எரிமலை வெடித்துள்ளதால் சாம்பல் மேகங்கள் உலகெங்கும் பரவி வருகிறது.
இருளில் மூழ்க்கிய டெல்லி
மணிக்கு 100-120 கி.மீ வேகத்தில் வீசும் காற்றினால் இந்த எரிமலைச் சாம்பல் மேகங்கள் இந்தியா உட்பட பல நாடுகளுக்குப் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எத்தியோப்பியாவின் அஃபார் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்துச் சிதறியது. அந்த சாம்பல் கிழக்கு நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இது நேற்று இரவு டெல்லியை அடைந்துள்ளது. இந்த எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி காற்று மாசுடன் போராடி வரும் நிலையில், இந்த எரிமலை சாம்பலும் டெல்லியை நேற்றிரவு அடைந்துள்ளது. இதன் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எப்படி பரவியது
வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பரவியுள்ள இந்தச் சாம்பல் மேகங்கள் முதலில் குஜராத்திற்குள் நுழைந்துள்ளது. பின்னர் அது ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ஹெய்லி கூப்பி எரிமலை வெடிப்பால் சுமார் 15 கி.மீ உயரம் வரை சாம்பல் பரவி இருப்பதாக டாக்டர். ஃபண்ட்ஜி பெனடிக்ட் கூறுகிறார்.
அறிவுறுத்தல்
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் எரிமலைச் சாம்பலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் விமானப் போக்குவரத்தை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எரிமலை சாம்பல் பரவும் இடங்களை பொறுத்து விமான ரூட்டை திட்டமிடவும் அதற்கேற்ப எரிபொருளை கணக்கிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சாம்பல் மேகத்தில் பெரும்பாலும் சல்பர் டை ஆக்சைட்டால் ஆனது. இதனால் எரிமலை பிழம்பு அதிக காற்று மாசை ஏற்படுத்தாது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் இது நேபாளத்தின் மலைப்பகுதிகள், இமயமலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் SO2 அளவுகளை அதிகரிக்கும் என்கிறார்கள்.
14 கிமீ உயரம்
எத்தியோப்பியாவின் அஃபார் பிராந்தியத்தில் ஹெய்லி கூப்பி எரிமலை வெடித்தபோது, அடர்ந்த புகை மண்டலம் 14 கிமீ உயரம் வரை வானில் பரவி, பல கிராமங்களைச் சாம்பலால் மூடியது. சுமார் 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த எரிமலை, பூமிக்கு அடியில் இரண்டு டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் இடமான ரிஃப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications