இந்தியா பக்கம் வீசும் காற்று.. இன்னைக்கு நடக்கும் முக்கிய சந்திப்பு! சீனாவுக்கு சிக்கல்தான் போங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா வந்திருக்கும் ஐரோப்பிய யூனியன் தலைவர், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருக்கிறார். இது இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே அமெரிக்காவுக்கும்-ஐரோப்பிய யூனியனுக்கும் இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில், ஐரோப்பிய யூனியன் தலைவரின் இந்தியா விசிட் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

EU international US

இந்தியாவுக்கான வாய்ப்பு:

நேற்று டெல்லி வந்த ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், "இந்தியா நம்பகமான நண்பர். நல்ல கூட்டாளியும் கூட" என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒன்று தொழில்துறை வளர்ச்சியை இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் பங்கிட்டுக்கொள்ள முன்வந்திருக்கிறது. இரண்டாவது, ராணுவ விவகாரங்களில் இந்தியாவின் உதவியை நாட இருக்கிறது.

ஐரோப்பிய யூனியனுக்கு என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பலம் வாய்ந்த ராணுவ கட்டமைப்பு கிடையாது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோதான், யூனியனுக்கு சப்போர்ட் செய்து இருந்தது. ஆனால், தற்போது அமெரிக்கா இந்த விஷயத்தில் எங்களுக்கு நிறைய பணம் செலவாகிறது. எனவே உங்க பாதுகாப்பை நீங்களே பாத்துக்கோங்க என விலகிக்கொண்டது. இதனால்தான் ஐரோப்பிய யூனியனின் காற்று தற்போது இந்தியா பக்கம் வீசி இருக்கிறது.

கைவிரித்த அமெரிக்கா:

விரிவாக சொல்வதெனில், ஐரோப்பிய யூனியனுக்கும்-அமெரிக்காவுக்கம் இடையே 'trans-Atlantic partnership' எனும் ஒப்பந்தம் இருந்து வந்தது. அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். பைடன் அமெரிக்காவின் அதிபராக இருந்த வரை இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், டிரம்ப் வந்த பிறகு.. மேலே குறிப்பிட்டதை போல, பணம் நிறைய செலவாகிறது என்று கூறி ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளும் கட்டத்திற்கு வந்திருக்கிறார்.

என்னதான் பிரச்சனை டிரம்ப்புக்கு?:

மட்டுமல்லாது உக்ரைன்-ரஷ்யா போரில் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுக்கு அதிக நிதியை கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் கூறி வந்தார். இது ஐரோப்பிய யூனியனுக்கு பெரிய தலைவலி. இருக்குற நிதியை கொண்டு நாட்டை மேம்படுத்துவதா? போருக்கு செலவழிப்பதா? என்று யூனியனில் இருப்பவர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். ஆனால் டிரம்ப் விடவில்லை. தொடர்ந்து அழுத்தம் கொடுக்க தொடங்கினார்.

மறுபக்கம் பாதுகாப்பு விஷயத்திற்கும் அமெரிக்காவை ஓவராக சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. போதாத குறைக்கு வர்த்த விஷயத்தில் ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு மதிப்பு இல்லாமல் செய்யும் சில சட்டங்களை டிரம்ப் அமெரிக்காவில் கொண்டு வந்தார்.

ஏம்பா.. நாம கூட்டாளிங்க! எங்க நாட்டுல உற்பதி செய்யும் பொருளை அமெரிக்காவிலும், அங்க உருவாக்குற பொருளை இங்கேயும் விக்கிறதுதான பேச்சு. இப்போ பொசுக்குனு புது சட்டத்தை கொண்டு வந்து, எங்க பொருட்களுக்கு வேல்யூவே இல்லாம பண்ணிட்டியே இது நியாயமா? என ஐரோப்பிய யூனியன் கேட்டது. ஆனால் டிரம்ப் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. எனவே அமெரிக்காவுக்கு யூனியன் தன்னுடைய ஒத்துழைப்பை வழங்கவில்லை.

இந்தியாவுக்கு லாபம் இதுதான்:

இந்த உரசல் நேரத்தில்தான் யூனியன் தலைவர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அடுத்த ஆண்டு இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாடு நடக்க இருக்கிறது. அதற்குள் இந்தியாவுடன் சில ஒப்பந்தங்களை போட்டுக்கொள்ள யூனியன் தயாராக இருக்கிறது. குறிப்பாக இந்தோ-பசிபிக் பாதுகாப்பு குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடக்கலாம்.

அதேபோல கார்கள், ஒயின் மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்குமாறு இந்தியாவிடம் ஐரோப்பிய யூனியன் கோரிக்கை விடுக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், AI, செமிகண்டக்டர், கிரீன் ஹைட்ரஜன், சுத்தமான ஆற்றல், நகரமயமாக்கல், நீர் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய ஐரோப்பிய யூனியன் விரும்பலாம் எனவும் சொல்லப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும் ஐரோப்பிய யூனியன் காற்று நம்ம பக்கம் வீசுவது நமக்கு லாபம்தான். சீனாவை பொருளாதார ரீதியாக எதிர்கொள்ள நமக்கு கிடைக்கப்போகும் பெரிய வாய்ப்பு இது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+