சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும்.. எட்டாக்கனியாக உள்ள பாஸ்போர்ட்! இத்தனை பேரிடம்தான் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பாஸ்போர்ட் என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே இருப்பது சமீபத்திய ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

வெளிநாடு செல்வதற்கு மட்டுமல்லாமல் தனி நபரிடம் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஸ்போர்ட்டை, வெறும் சொற்ப எண்ணிக்கையிலான இந்தியர்களே வைத்துள்ளதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பாஸ்போர்ட் கிடைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது.. ஏன் குறைவான நபர்கள் மட்டுமே பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து இங்கு காண்போம்.

வல்லரசு நாடுகளுடன் போட்டி

வல்லரசு நாடுகளுடன் போட்டி

சுதந்திரம் அடைந்த புதிதில் ஆப்பிரிக்கா போன்ற வறுமை நிறைந்த நாடுகளுடன் ஒப்பிடப்பட்ட இந்தியா, இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி அசுரத்தனமானது என்று சொன்னால் அது மிகையாகாது. கல்வி, தொழில், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வல்லரசு நாடுகளுடன் இந்தியா தற்போது போட்டி போட்டு கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் இந்தியர்களே அதிக பங்களிப்பு அளித்து வருகின்றனர்.

அதிர வைக்கும் பாஸ்போர்ட் எண்ணிக்கை

அதிர வைக்கும் பாஸ்போர்ட் எண்ணிக்கை

இதுபோன்ற வளர்ச்சிக் குறியீடை எடுத்துக்காட்டும் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அதற்கு முற்றிலும் முரணாக இருக்கும் புள்ளிவிவரம் வந்துள்ளது. அதாவது, இந்தியாவில் எத்தனை பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது என்பது தொடர்பான புள்ளிவிவரம்தான் அது. இப்படி கேட்டவுடன் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்? குறைந்தபட்சம், 60 கோடி பேரிடமாவது பாஸ்போர்ட் இருக்கும் என்றுதானே நாம் கூறுவோம். ஆனால், உண்மையில், வெறும் 9.6 கோடி பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருக்கிறதாம்.

சாதாரண நாடுகளை விட குறைவு

சாதாரண நாடுகளை விட குறைவு

அதாவது, இந்திய மக்கள் தொகையான 130 கோடி பேரில் 9.6 கோடி பேரிடம் தான் பாஸ்போர்ட் இருக்கிறது என்றால், வெறும் 7.2 சதவீதம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை, அடுத்த சில மாதங்களில்தான் 10 கோடியையே தொடும் எனக் கூறப்படுகிறது. வல்லரசு நாடுகளை கூட வேண்டாம். சாதாரண வளர்ச்சியை பெற்றிருக்கும் நாடுகளை ஒப்பிட்டால் கூட இந்த எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும்.

கடினமான நடைமுறை

கடினமான நடைமுறை

பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு, பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறைகள் கடுமையாக இருந்ததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மிகச் சமீபகாலமாகவே இந்த நடைமுறைகளை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது. மேலும், பாஸ்போர்ட் விநியோக மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, அதிகபட்சமாக பாஸ்போர்ட் வைத்திருக்கும் மக்களை கொண்ட மாநிலமாக கேரளா விளங்குகிறது. அங்கு 2.2 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக, மகாராஷ்டிரா, தமிழகம், உத்தரபிரதேசம், பஞ்சாப், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான பாஸ்போர்ட் வைத்திருக்கும் மக்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் (டிசம்பர் 12-ம் தேதி வரை) இந்தியா முழுவதும் 1.1 கோடி பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+