சில நாட்கள் மட்டுமே நடந்தாலும் சிறப்பு கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது - பிரதமர் மோடி
டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் சில நாட்கள் மட்டுமே நடந்தாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எனினும், அறிவிக்காமல் திடீரென சில மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி கூறியதாவது:- சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் மூவர்ண கொடி நிலவிலும் பறக்கிறது. சில நாட்கள் மட்டுமே நடந்தாலும் சிறப்பு கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும். சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளது" என்றார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications