இந்தியாவிலும் பரவிய HMPV வைரஸ்.. லாக்டவுன் விதிக்கப்படுமா? மறுக்கும் வல்லுனர்கள்.. விவரம்
டெல்லி: சீனாவில் உருவாகிய ஹெச்எம்பிவி வைரஸ் தற்போது இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனாவை ஞாபகப்படுத்துவது போலவே தற்போது இந்த வைரசும் இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த நிலையில் அதேபோன்று தற்போதும் லாக்டவுன் மற்றும் அதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்று சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பலரும் விவாதித்து வருகிறார்கள். ஆனால் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு சாதாரணமானது தான் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்பதே மருத்துவ வல்லுனர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
சீனாவில் HMPV வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்தே பரவியதால் சீனாவில் பரவும் இந்த வைரஸ் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா போன்ற வைரஸ் வந்துவிட்டது.. நிலைமை மோசமாக போகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு பீதியை கிளப்பி விட்டுள்ளனர்.

HMPV வைரஸ் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன. உலக நாடுகளும் இந்த வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணிப்பதாக கூறியுள்ளன. இதற்கிடையே, இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கூட இரண்டு குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூர், சென்னை, குஜராத் ஆகிய இடங்களில் வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை. இதனால் பெங்களுரில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த லாக் டவுன் போட்டது போல இதற்கும் லாக்டவுன் விதிக்கப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதே மருத்துவ வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

ஹெச்.எம்.பி.வி வைரஸ் என்பது மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக இந்த வைரஸ் தாக்குகிறது. பயப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை.. இதை பார்த்து கொரோனா போல அச்சப்பட வேண்டாம். இது சாதாரண மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
HMPV வைரஸ் இருமல் மற்றும் தும்மலின்போது வெளியாகும் சளி துளிகள் மூலம் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. கை குலுக்குவதன் மூலமோ ஒருவருக்கொருவர் தொடுவதன் மூலமாகவோ இந்த வைரஸ் பரவக்கூடும்.

ஹெச்,எம்.பி.வி. எனப்படும் ஹியூமன் மெட்டாநியுமோ வைரஸ் (HMPV) பாதிப்புகள் தற்போது இந்தியாவிலும் தென்பட ஆரம்பித்துள்ளன. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பலரும் விவாதித்து வருகிறார்கள். ஆனால், ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு சாதாரணமானது தான் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்றே மருத்துவ வல்லுனர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications