Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதெப்படி திமிங்கலம்? காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியில் வாக்கு திருட்டா! ராகுல் காந்தி சிக்கிட்டார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது, இதனால் காங்கிரஸ் ஆட்சி திருடப்பட்டிருக்கிறது என்று ராகுல் காந்தி சரமாரியாக விமர்சித்திருந்தார். வாக்கு திருட்டு குறித்து ஆதாரங்களாக சில ஆவணங்களையும் வெளியிட்டிருந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், காங்கிரஸ் வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதியில் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார் என்பதுதான்.

அதாவது ராகுல் காந்தி, ஹரியானாவின் 'முலானா' சட்டமன்ற தொகுதியை வாக்கு திருட்டுக்கு உதாரணமாக கூறியிருந்தார். இந்த தொகுதியில் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த தொகுதியில் ஒரு குறிப்பிட்ட வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் 220 முறை இடம்பெற்றிருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

Rahul Gandhi ECI

சொந்த தொகுதியில் வாக்கு திருட்டு

இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது இந்த தொகுதியில் அந்த வாக்காளரின் பெயர் முன்னதாக வாக்குச்சாவடி எண் 63ல் இடம்பெற்றிருந்தது. ஆனால் 2024 தேர்தலின்போது அவரது பெயர் 64வது வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகாரிக்கும்போது, புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும். இந்த பிரிவின் போது நிர்வாக பிழை காரணமாகவோ, தகவல் உள்ளீட்டில் ஏற்பட்ட பிழையின் காரணமாகவோ அவரது பெயர் தவறுதலாக 220 முறை வந்திருக்கலாம். அதற்காக அவர் 220 முறை வாக்களிக்க முடியும் என்று அர்த்தம் கிடையாது. இப்படி இருக்கையில் காங்கிரஸை நம்பி வாக்களித்த தொகுதி மக்களை சந்தேகிப்பதா? என்று பாஜகவினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

கருத்துக் கணிப்புகளும் ராகுல் காந்தியும்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டி, "பார்த்தீங்களா.. காங்கிரஸ்தான் ஜெயிக்கும் என்று கணிப்புகள் சொல்லியிருக்கின்றன. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.

இதே ராகுல் காந்தி கடந்த 2014, 2019 மற்றும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமான வந்தபோது, அதை பொய் பிரச்சாரம் என்று விமர்சித்திருந்தார். ஆனால் ஹரியானா தேர்தல் கருத்துக்கணிப்பு மட்டும் அவருக்கு வேத வாக்கு அப்படித்தானே? என்று பாஜகவினர் விட்டு விளாசியுள்ளனர்.

தபால் வாக்குகளில் தவறு

ராகுல் காந்தியின் பிரஸ் மீட்டில் இருந்த மூன்றாவது தவறு, தபால் வாக்குகள் பற்றியது. அதாவது தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னணியில் இருந்தது என்றும், அதுவே மின்னணு வாக்குப் பெட்டியில் பதிவான வாக்குகளை எண்ணும் போது காங்கிரஸ் தோல்வியடைந்தது என்றும் கூறி, இதை ஏற்க முடியாது, முறைகேடு நடந்திருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

ஹரியானாவில் பதிவான மொத்த வாக்குகளில் 0.57% மட்டுமே தபால் வாக்குகள். அதை வைத்து ஒட்டுமொத்த வாக்குகளின் முடிவை எப்படி தீர்மானிக்க முடியும்? இம்மாநிலத்தில் 4 தொகுதிகளில் தபால் வாக்குளில் பாஜகதான் முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசியில் இந்த 4 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்தது. எனவே தபால் வாக்குகளை வைத்து வெற்றி தீர்மானிப்பது சரியானது கிடையாது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

பிரேசில் மாடல் விவகாரம்

அதேபோல பிரேசில் மாடலின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் ராகுல் காந்தி சொல்வதை போல அதை உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையமோ, பாஜகவோ பயன்படுத்தவில்லை என்று பாஜகவினர் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இது நிர்வாக பிழையால் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இறுதியாக அவரது குற்றச்சாட்டுகளில் மிகவும் வலுவானது, ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிக்கிறார்கள், இவர்கள் போலியான வாக்காளர் குழு என்பதுதான். ஆனால் இந்த குற்றச்சாட்டையும் பாஜகவினர் மறுத்துள்ளனர். இங்கு வாழும் மக்கள் கூட்டு குடும்பமாக இருக்கின்றனர். அவர்கள் அருகருகே பிரிந்த வாழ்ந்தாலும், தங்களின் மூதாதையரின் வீட்டு எண்ணையே பயன்படுத்துகின்றனர். எனவே ராகுல் காந்தி சொல்வதை போல இவர்கள் போலி வாக்காளர்கள் குழு கிடையாது என்றும் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக, இந்தியா கூட்டணி தலைவர்கள் பெரிய அளவில் பேசாமல் இருந்தனர். இப்போது பாயிண்ட் பாயிண்டாக பாஜக, ராகுல் காந்திக்கு விளக்கமளித்திருக்கிறது. இதன் மூலம் அவரது குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயுள்ளன என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+