Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛கெஜ்ரிவால் முறைகேட்டுக்கு ஆதாரம் இருக்கு’.. டெல்லி மதுபான வழக்கின் ஜாமீன் மனு கோர்ட்டில் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரத்தை அமலாக்கத்துறை அளித்துள்ளது எனக்கூறி ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.

Excise policy Case Delhi High court to pronounce verdict on CM Arvind Kejriwal s bail plea

இதில் முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து சிபிஐ விசாரணை தொடங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்த நிலையில் அமலாக்கத்துறையும் விசாரணையில் களமிறங்கியது.

வழக்கு தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியினர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த. ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர் விஜய் நாயர், டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் எம்பி கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் பணம் கைமாற உதவியாக இருந்ததாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கவிதாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரும் அடிப்பட்டது. சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. அதன்பிறகு அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். மேலும் அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்தது. இந்த விசாரணையை தொடர்ந்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருந்தாலும் கூட அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகவே தொடர்கிறார்.

இத்தகைய சூழலில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. அதன்படி இன்று கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்று மதியம் 2.30 மணிக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணா காந்த சர்மா தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தீர்ப்பு 3.15 மணிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, ‛‛அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரத்தை அமலாக்கத்துறை அளித்துள்ளது எனக்கூறி ஜாமீன் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் செயலை கடுமையாக நீதிபதி கண்டித்தார்.

இதுதொடர்பாக நீதிபதி, ‛‛டெல்லி மதுபான கொள்கை விவகாரம்; கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கையை உருவாக்கியதில் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார். கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அமலாக்கத்துறை ஆதாரங்களில் தெரிகிறது. மேலம் அப்ரூவரின் வாக்குமூலத்தை சந்தேகிப்பது நீதிபதி, நீதிமன்றத்தின் மீது பழிசுமர்த்துவதாகிவிடும்.

அதோடு தேர்தல் எப்போது வரும் என்பது கெஜ்ரிவாலுக்கு தெரியும். இதனால் தேர்தலை முன்னிட்டு அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக எடுத்து கொள்ள முடியாது. அதோடு விசாரணையை காணொலியில் நடத்தலாம் எனக்கூறுவது ஏற்புடையது அல்ல. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்பதை தெரிவிக்க முடியும்?. அதோடு முதல்வர் என்பதாலேயே தனிச்சலுகை எதுவும் அளிக்க முடியாது. நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள்; அரசியலுக்கு அல்ல'' என தெரிவித்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் கெஜ்ரிவால் சிறையிலேயே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+