பிரதமர் மோடி அறிவித்த 15 to 18 வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி! என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 15 முதல் 18 வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
3-ஆவது அலை வருவதற்குள் 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க நிபுணர்கள் முனைப்பு காட்டினர். இந்த நிலையில் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் உரையாற்றினார்.

ஓமிக்ரான் அச்சம்
அப்போது அவர் கூறுகையில் ஓமிக்ரான் குறித்த அச்சம் வேண்டாம். 15 முதல் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

டெல்லி மருத்துவர் கூறியது என்ன
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும் கருத்துகள் என்ன என்பதை பார்ப்போம். டெல்லி கங்காராம் மருத்துவமனையின குழந்தைகள் நல நுரையீரல் துறை நிபுணர் டாக்டர் திரென் குப்தா கூறுகையில் இது வரவேற்புக்குரிய முடிவுதான். அடுத்தது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். அவரவர் கிளீனிக்குகளில் குழந்தைகள் நல நிபுணர்களே தடுப்பூசிகளை போட அனுமதிக்க வேண்டும்.

முக்கியம்
எல்லாம் சரி எதற்காக ஜனவரி 10 வரை நாம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இந்த அசாதாரண நிலையில் முக்கியமான நாளாகும். ஓமிக்ரான் வேகமாக பரவி வருவதை நாம் அறிவோம். இந்த வைரஸ் குறித்து மாற்றங்கள் இருக்கின்றன. பூஸ்டர் டோஸ் ஒரு உடலில் போதுமான ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு 3 வாரங்கள் பிடிக்கும். எனவே பூஸ்டர் தடுப்பூசி 2 அல்லது 3 நாட்களுக்குள் தொடங்க வேண்டும்.

சீக்கிரம்
ஒட்டுமொத்த மக்கள்தொகை எண்ணிக்கையை நினைத்து பாருங்கள். எனவே நாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்கிட வேண்டும். இணை நோய் உள்ளவர்களுக்கும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பு மருந்து அவர்களது தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications