ஸ்ரீநகரில் மீண்டும் வெடிச்சத்தம்.. தாக்குதல் நிறுத்தம் என்ன ஆனது? உமர் அப்துல்லா ஆவேசம்
ஸ்ரீநகர்: இன்று மாலை 5 மணியளவில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டு வந்த மோதல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தாக்குதல் நிறுத்தம் செய்து 3 மணி நேரத்துக்குள் காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் தாக்குதல் நிறுத்தம் என்ன ஆனது என்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு கடந்த புதன்கிழமை இந்தியா பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 4 நாட்களாக இந்த தாக்குதல் நடந்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டு வந்த மோதல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதல் நிறுத்தம் செய்து 3 மணி நேரத்துக்குள் காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் ஆவேசமான ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தாக்குதல் நிறுத்தம் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தாக்குதல் நிறுத்தம் என்று இருநாடுகளும் அறிவித்ததற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்து இருந்தார். மேலும் சேதமடைந்த இடங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை செய்ய வேண்டும். மேலும் இந்த பேச்சுவார்த்தையானது முன்னதாகவே நடந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறுகையில், "இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஏற்பட்டுள்ள தாக்குதல் நிறுத்த முடிவை நான் வரவேற்கிறேன். இந்த தாக்குதல் நிறுத்த முடிவு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது ஜம்மு காஷ்மீரின் அரசின் கடமையாகும்" என்று உமர் அப்துல்லா பதிவிட்டு இருந்தார்.
ஆனால் தாக்குதல் நிறுத்த அறிவிப்பு நிறுத்தப்பட்ட சிறிது நேரத்த்தில் மீண்டும் பாகிஸ்தான் அடாவடியாக தாக்குதல் நடத்தியிருப்பதற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய தாகுதலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications