ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர் ஏற்றுமதிக்கு தடை.. மத்திய அரசு திடீர் உத்தரவு.. காரணம் இதுதான்
டெல்லி: ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய தொழில்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்று கைகளில் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை அவ்வப்போது பயன்படுத்துவதுதான் ஆகும்.
இது கொரோனா கிருமியை ஒழிக்க கூடியது என்று பல நாட்டு விஞ்ஞானிகளும் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறார்கள்.

தொழில்
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக உள்ளது. மற்றொரு பக்கம், தொழில் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பணியாளர்களை கொண்டு தொழில் துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை வீட்டிலிருந்த மக்களில் கணிசமானோர் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கட்டாயம்
அங்கு சானிட்டைசர்கள் பயன்பாடு என்பது கட்டாயம் ஆகும். எனவே இவற்றுக்கான தேவையும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் நோய் பாதிப்பால் அச்சமடையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால், மற்றொரு பக்கம் ஆலைகளுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லக்கூடிய மக்களும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
|
தடைகள்
எனவே ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசர்களின் ஏற்றுமதிக்கு தடையை விதித்துள்ளது மத்திய அரசு. ஏற்கனவே வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இறக்குமதி மட்டுமே
வெண்டிலேட்டர் போன்ற உபகரணங்களை மத்திய அரசு இறக்குமதி மட்டுமே செய்து வருகிறது. இந்த பட்டியலில் சானிட்டைசர் தற்போது இணைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, வழக்கத்தைவிட பல மடங்கு, சானிட்டைசர்கள் விலைகள் அதிகரித்துள்ளது. எனவே ஏற்றுமதி மீதான தடை, விலையேற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என நம்பலாம்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications