ஸ்டிரிட்..! புதிய ஐடி விதிகள்.. 3 கோடி பதிவுகளை தூக்கிய பேஸ்புக்.. இன்ஸ்டா & கூகுள் நடவடிக்கை என்ன
டெல்லி: புதிய ஐடி விதிகளின் கீழ் கடந்த மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் மூன்று கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஐடி கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கொள்கைகளுக்கு ஏற்றப்படி டிஜிட்டல் நிறுவனங்கள் மாற்றிக் கொள்ள 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த விதிகளை ட்விட்டர் தவிர பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டன.

ஐடி விதிகள்
இந்த புதிய ஐடி விதிகளின் கீழ் பயனாளர்களின் புகார்களின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை டிஜிட்டல் நிறுவனங்கள் மாதம் ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், மே 15 முதல் ஜூன் 15 வரை புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேஸ்புக் நிறுவனம் இடைக்கால அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. விரிவான அறிக்கை வரும் ஜூலை 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

மூன்று கோடி பதிவுகள்
அதில் சுமார் 3 கோடி பதிவுகளுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு பதிவு குறித்து பயனாளி ஒருவர் புகார் அளிப்பதற்கு முன்னரே, பேஸ்புக் நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்தின் மூலம் 96.4-99.9 % வரை பதவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து சுமார் 20 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Array
கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு மொத்தம் 27,762 புகார்கள் பெறப்பட்டுள்ளன.அதில் இந்திய விதிகளை மீறியதாக சுமார் 59 ஆயிரம் கண்டென்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கூ தளம் தனக்கு 5,502 புகார்கள் வந்ததாகவும் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்த 54,235 பதிவுகள் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ட்விட்டர்
மத்திய அரசின் புதிய ஐடி சட்டத்தின் கீழ் அனைத்து டிஜிட்டல் நிறுவனங்களும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபரை நோடல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐடி விதிகளுக்கு உட்படுவதாக அறிவித்துவிட்டன. இருப்பினும், டவிட்டர் நிறுவனம் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட மறுக்கிறது. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications