டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவின் தளம் ஹேக் செய்யப்படவில்லை.. பொய்யான தகவல்.. வதந்திகளுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கோவின் (CoWin) தளம் வேக்சின் செய்யப்பட்டு, அதில் உள்ள மக்களின் விவரங்கள் வெளியில் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வேக்சின் போட்டுக்கொள்வதற்காக கோவின் (CoWin) தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தளத்தில் சில வசதி குறைபாடுகள் இருப்பதாகவும், எளிதாக வேக்சின் ரிஜிஸ்டிரேஷன் செய்ய முடியவில்லை என்றும் மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

Fake news buster: No Cowin site is not hacked or any data leaked

இந்த நிலையில் கோவின் (CoWin) தளம் வேக்சின் செய்யப்பட்டதாக இணையத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் உலா வந்தன. அதோடு அதில் உள்ள மக்களின் விவரங்கள் வெளியில் கசியவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுவரை 150 மில்லியன் மக்கள் இந்த தளத்தில் ரிஜிஸ்டர் செய்துள்ளனர்.

இவர்களின் தகவல் அனைத்தும் பொது வெளியில் கசிந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் உலவின. அதோடு மக்களின் இருப்பிடம், ஜிபிஎஸ் லோகேஷன் போன்றவையும் கசிந்துவிட்டதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டன.

இந்த நிலையில் கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது, அடிப்படை ஆதாரமற்றது.

கோவின் தளத்தில் எந்த ஹேக்கிங்கும் செய்யப்படவில்லை. இதில் இருந்து தகவலும் கசியவில்லை. ஜிபிஎஸ் லோகேஷன் போன்ற தகவல்களை நாங்கள் மக்களிடம் இருந்து பெறுவது கூட இல்லை. கோவின் தளத்தின் டேட்டா எல்லாம் பாதுகாப்பாக உள்ளது.

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

இருப்பினும் இந்த செய்திகள் குறித்து விசாரிக்க Computer Emergency Response Team அமைப்பான செர்ட் அமைப்பிடம் உத்தரவிட்டு இருக்கிறோம், என்று தகவல்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
Fake news buster: No Cowin site is neither hacked nor any data leaked. Union ministry says that CoWin data breach as "incorrect" and "baseless".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X