ஸ்வீட்டி, விமலானு பிரேசில் மாடல் போட்டோவுடன் போலி வாக்குகள்! ஹரியானாவில் நடந்தது இதுதான்! ராகுல் பகீர்
டெல்லி: இன்று டெல்லியில் வாக்கு திருட்டு தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி சில முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைப் போல ஹரியானாவிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே காங்கிரஸால் அங்கு வெல்ல முடியவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். மேலும், பிரேசில் பெண் மாடல் பெயரில் பல போலி வாக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கிடையே பீகாரில் நாளை தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி இப்போது டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். வாக்கு திருட்டு தொடர்பாக அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

வாக்கு திருட்டு
ஹரியானா தேர்தலில் முறைகேடு நடந்ததாலேயே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை என்று ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஹரியானாவில் ஆட்சி திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். ஹரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிராவைப் போல ஹரியானாவிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தேர்தல் முறைகேடுகளைப் புரிந்து Gen Z வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற அவர், ஹரியானாவில் பிரேசில் பெண் மாடல் படம் பல பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது என்றும் பெண் மாடல் போட்டோவை வைத்துப் பல வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டினார். ஒரு போட்டோவை வைத்து ஒரே தொகுதியில் 100 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தி
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் 'ஜென் Z' தலைமுறையினர் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.. ஏனெனில் இது அவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.. நான் இங்கு இந்தியாவின் ஜனநாயக நடைமுறையை நேர்மையாக நடக்கிறதா எனக் கேள்வி கேட்கிறேன். இதற்கு எங்களிடம் 100% ஆதாரம் இருக்கிறது. காங்கிரஸின் மாபெரும் வெற்றியைத் தோல்வியாக மாற்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.. இது எங்களுக்கு உறுதியாகத் தெரியும்.
8ல் ஒரு போலி வாக்கு
ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 2 கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.. ஹரியானாவில் உள்ள ஒவ்வொரு எட்டு வாக்காளர்களில் ஒருவர் போலியானவர். இது மொத்த வாக்காளர்களில் 12.5% ஆகும்" என்றார்.
அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் எனக் கூறிய நிலையில், முடிவுகள் பாஜகவிற்குச் சாதகமாக வந்ததை அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர், பாஜக தலைவரும் முதலமைச்சருமான நயாப் சிங் சைனி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் வீடியோவையும் ராகுல் காந்தி போட்டுக் காட்டினார். அந்த வீடியோவில் தேவையான "ஏற்பாடுகள்" செய்யப்பட்டுள்ளதாகவும், பாஜக வெற்றி பெறும் என்றும் சைனி கூறியிருந்தார். இதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி "அந்த ஏற்பாடுகள் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
பிரேசில் மாடல்
மேலும், ஹரியானா வாக்காளர் பட்டியலில் உள்ள 22 இடங்களில் ஒரு பெண்ணின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததை ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். அந்தப் போட்டோ, மாத்யூஸ் ஃபெரெரோ என்ற பிரேசில் மாடலின் போட்டோ ஆகும். இணையத்தில் இருந்து அந்த போட்டோவை டவுன்லோடு செய்து யூஸ் செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். அந்த ஒரு பெண்ணின் போட்டோ ஸ்வீட்டி, சீமா, சரஸ்வதி எனப் பல்வேறு பெயர்களுடன் 22 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "தேர்தல் ஆணையம் நினைத்தால் போலி வாக்காளர்களை ஒரே நொடியில் அகற்ற முடியும். ஆனால் அவர்கள் ஏன் இதைச் செய்வதில்லை? இதற்குக் காரணம்: அவர்கள் பாஜகவிற்கு உதவுகிறார்கள்" என்று ராகுல் காந்தி பகிரங்மாக குற்றம் சாட்டினார்.
-
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு










Click it and Unblock the Notifications