டெல்லி மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் மூதாட்டி பலி.. உறவினர்கள் வன்முறை
டெல்லி: டெல்லியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மூதாட்டிக்கு படுக்கை கிடைக்காததால் பலியானதை அடுத்து அவரது உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்லது அப்பல்லோ மருத்துவமனை. இங்கு 62 வயது மூதாட்டிக்கு உடல்நிலை குறைவு என அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் அனைத்து நிரம்பி வழிகின்றன.

இதனால் இந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதி இல்லாமல் மூதாட்டி காக்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து படுக்கை கிடைக்காததால் மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.
Heavy violence at Apollo hospital with lathis and sharp objects. A sick female patient needed iCU bed, she was taken to emergency but she died after some time. Patient's attendant got aggressive as she did not get ICU bed. #Apollo #COVID19India pic.twitter.com/aIPpfD4uNi
— SUSHILABEN SOLANKI (@babusinhsolank2) April 27, 2021
பின்னர் மருத்துவமனைக்கு வெளியே வன்முறையில் ஈடுபட்டனர். இதுவரை இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸுக்கு எந்த புகாரும் கிடைக்கப் பெறவில்லை.












Click it and Unblock the Notifications