பயங்கரவாத சதி.. பெண் டாக்டர் கைது.. ஃபரீதாபாத்தில் வெடிபொருள் வைத்திருந்த கார் இவரோடது தானாம்!
டெல்லி: டெல்லியில் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தில் பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 360 கிலோ வெடி பொருட்களுடன் 3 ஆண் மருத்துவர்கள் கைதான நிலையில் அவருடன் பணியாற்றிய பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிபொருள் இருப்பதாக கிடைக்கப்பட்ட தகவல் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது டெல்லி அருகே உள்ள ஃபரீதாபாத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரியில் மாணவர்களின் லாக்கரில் 360 கிலோ வெடி பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

அமோனியம் நைட்ரேட் வெடிபொருட்கள் கல்லூரிக்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி பொருட்களுடன் ஒரு ஏ.கே 47 ரக துப்பாக்கியும் 3 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்னர். கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் மட்டுமல்லாமல் டாக்டர். உமர் முகமது என்பவரையும் போலீசார் தேடி கைது செய்தனர்.
மேலும், சூட்கேசில் உள்ள வெடி பொருட்களை ஆய்வகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, என்னென்ன இடங்களில் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பேட்டரிகளுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்கள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு செய்ய முயற்சியா என விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பாக உத்தர பிரதேசத்தில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஷ்-எ-மொஹம்மது இயக்கத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட அந்த மருத்துவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் நடந்த சோதனையில்தான், ஃபரிதாபாத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் லக்னோவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிபொருட்கள் பறிமுதல் விவகாரத்தில் துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட கார், ஃபரிதாபாத் மருத்துவமனையில் டாக்டர் முஜம்மில் ஷகீலுடன் பணிபுரியும் ஒரு பெண் மருத்துவருக்கு சொந்தமானது என்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications