126வது நாளாக டெல்லியில் போராட்டம்- உச்சநீதிமன்றத்தில் விவசாய சட்டங்கள் குறித்த ஆய்வு அறிக்கை தாக்கல்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று 126-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் விவசாய சட்டங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வல்லுநர் குழு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களால் விவசாயிகள் வாழ்வாதாரம் வஞ்சிக்கப்படும் என்பது அச்சம். இதனால் இந்த 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது கோரிக்கை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் 126-வது நாளாக இன்றும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி எல்லைகளை முற்றுகையிட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அத்துடன் உச்சநீதிமன்றமும் இந்த சட்டங்கள் குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைத்து இருந்தது.
இக்குழுவினர் தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கடந்த மார்ச் 19-ந் தேதியன்று சீலிட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீதான விசாரணை ஏப்ரல் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications