டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுமா? எதிர்பார்ப்புடன் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 47 நாட்களாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெறும் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் 47 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது.

Farm Laws.. SC to Hear on Jan 11

இப்பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15-ல் நடைபெறுகிறது. இதனிடையே விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்குகள், விவசாயிகள் போராட்டங்களுக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டா தலைமையிலான பெஞ்ச் இந்த விசாரணையை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளைப் பொறுத்து அடுத்த கட்டம் என்னவாகும்? என தெரியவரும்.

விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது:மத்திய அமைச்சர்கள் உறுதி.. -8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது:மத்திய அமைச்சர்கள் உறுதி.. -8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

இதனிடையே உச்சநீதிமன்ற விசாரணையில் நாளை எதுவும் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால் வேறுவழியே இல்லாமல் புதிய விவசாய சட்டங்களில் சில அம்சங்களில் மட்டும் மத்திய அரசு திருத்தங்களை கொண்டுவரலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.

English summary
The Supreme court will hear the cases against Centre's Farm Laws on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X