Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அவர்களுக்கு நாங்க இருக்கோம்.." மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இறங்கிய விவசாய சங்கம்.. அடுத்து என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு விவசாயச் சங்கத்தினர் ஆதரவு அளித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பிரிஜ் பூஷன். இவருக்கு எதிராக பாலியல் புகார்கள் வந்த நிலையில், இது தொடர்பாக விசாரிக்கக் கடந்த ஜனவரி மாதம் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

இருப்பினும், அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.

Farmers says they Will Fight Till Wrestlers Get Justice After Mahapanchayat

புகார்: மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யவே சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர வேண்டி இருந்தது. அதன் பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டம் நடத்தி வந்தனர். நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பு போராட்டம் நடத்த முயன்ற, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதன் பின்னர் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின், பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தாங்கள் வென்ற பதக்கங்களையே கங்கையில் வீச உள்ளதாக அறிவித்தனர். இதற்காக ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தொடர்களில் வென்ற பதக்கங்களுடன் வீரர், வீராங்கனைகள் ஹரித்வாருக்கு சென்றனர்.

கங்கை நதி: வீரர்கள் கண்ணீருடன் பதக்கங்களை வீச கங்கைக்குச் சென்ற போது, விவசாயச் சங்க தலைவர் நரேஷ் டிக்கைட் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்ட நரேஷ் டிக்கைட், தங்களுக்கு 5 நாட்கள் தங்களுக்கு டைம் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன் பின்னரே மல்யுத்த வீரர்கள் பதக்கங்களைக் கங்கையில் விடும் போராட்டத்தைத் தள்ளி வைத்தனர்.

Farmers says they Will Fight Till Wrestlers Get Justice After Mahapanchayat

இதற்கிடையே இன்றைய தினம் விவசாயச் சங்க போராட்டத்தை முன்னெடுத்த ராகேஷ் டிக்கைட் மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "ஹரியானாவில் நாளை நடைபெறும் கூட்டத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.. ஹரியானாவின் விவசாயிகள் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவை அளித்து வருகின்றனர். அடுத்தகட்ட திட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வோம்.

சமரம் இல்லை: இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.. தேவைப்பட்டால் குடியரசுத் தலைவரையும் சந்திக்கத் தயாராக உள்ளோம். நாங்கள் உங்களுடன் (மல்யுத்த வீரர்கள்) இருக்கிறோம், நீங்கள் கவலைப்பட வேண்டாம். கங்கையில் பதக்கங்களை மூழ்கடிக்க வேண்டாம்.. அதை ஏலத்தில் விடும்படி என்று சொன்னேன். அப்போது தான் ஒட்டுமொத்த உலகமே வந்து ஏலத்தை நிறுத்த சொல்லும்.

மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீகாரில் லாலு யாதவ் குடும்பத்தை உடைத்தனர். முலாயம் சிங் யாதவ் குடும்பத்தை என்ன செய்தார்கள் என்று பாருங்கள். ராஜஸ்தானிலும் இதேதான் நடக்கிறது.. ஆனால், நாங்கள் குடும்பமாக ஒன்றுபட்டு நிற்போம். மல்யுத்த வீரர்களின் உரிமைக்காகக் கடைசி வரை களத்தில் இருப்போம். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+