வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் தீவிரம் - நாடு முழுவதும் விவசாயிகள் சுற்றுப்பயணம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் 40 விவசாய சங்க தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்து இருக்கின்றனர்.
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 82 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் 40 விவசாய சங்க தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்து உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி எல்லை பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக பலர் மரணமடைந்துள்ளனர். மேலும் பல விவசாயிகள் முதுகுவலி, உடல் வலி, உள்ளங்காலில் புண் என்று அவதிப்பட்டு வருகின்றனர். மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத்தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணி வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து பல விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளில் பல அடுக்கு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
40 லட்சம் டிராக்டர்களை கொண்டு இம்முறை பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதில், நாடு முழுவதும் ஆதரவை பெறுவதற்காக 40 தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். டெல்லி எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications