பட்ஜெட்: விவசாயிகள் பற்றி பேசிய நிதி அமைச்சர் தற்கொலை பற்றி பேசலயே.. சரமாரியாக விளாசிய ப.சிதம்பரம்!
டெல்லி: இளைஞர்களை பற்றி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேலையின்மை பற்றி பேசவில்லை, விவசாயிகளை பற்றி பேசிய நிதியமைச்சர் விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசவில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இன்றைய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் "கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது" என்றார்.

மேலும், நாட்டில் 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் குறித்தும், நிதி அமைச்சரின் உரை குறித்தும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி: அப்போது பேசிய ப.சிதம்பரம், "இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் வேலையின்மை குறித்து எதுவும் பேசவில்லை. 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் கிராமப்புறங்களில் 8.3 % நகர்புறங்களில் 13.8% பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். 25 வயதிற்கு உட்பட்ட படித்த இளைஞர்கள் 42 சதவிகிதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர்.
30 முதல் 34 வயது வரையிலான படித்த இளைஞர்கள் 9.8% வேலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. கடந்த பத்து வருடங்களாக இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளை உடைக்கும் வேலையைத் தான் மத்திய பாஜக அரசு செய்து வந்துள்ளது.
விவசாயிகளின் தற்கொலை பற்றி பேசவில்லை: விவசாயிகள் பற்றி பேசிய நிதி அமைச்சர், விவசாயிகளின் தற்கொலை குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை? ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலையில்லாத குறைந்தபட்ச ஆதார விலை, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, காப்பீடு விவகாரங்களில் குளறுபடி போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் எதுவும் இந்த பட்ஜெட் உரையில் பேசவில்லை.
ஜிடிபி குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் தனிநபர் வருமானம் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை. இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசி உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பணவீக்கம் குறித்து மேம்போக்காக குறிப்பிட்ட மத்திய நிதி அமைச்சர் உணவுப் பொருட்களின் விலை 7.7% வரை அதிகரித்திருப்பது குறித்து எதுவும் பேசவில்லை.
இட ஒதுக்கீடு காலி: புதிய கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் மருத்துவமனை கல்லூரிகள் கட்டப்படும் என பேசும் நிதி அமைச்சர் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து பேசவில்லை. குறிப்பாக இந்த பணியிடங்கள் எல்லாம் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இடங்கள்.

கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு காலில் போட்டு நசுக்கி வருகிறது. மத்திய அரசின் அனைத்து பொருளாதாரக் கொள்கைகளும் நடவடிக்கைகளும் ஏழைகளைப் புறந்தள்ளி பணக்காரர்களுக்கு சாதகமானதாகவே இருந்து வருகிறது. நாட்டின் வெறும் பத்து சதவிகித மக்கள்தொகை கொண்ட நபர்களிடம் 60% பணம் மற்றும் வளங்கள் குவிந்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2014ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சியை 6.4% ஆகவும் சராசரி வளர்ச்சியை 7.5% ஆகவும் வைத்து சென்றது. அதன் பிறகு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜிடிபி வளர்ச்சியை ஆறு சதவீதத்திற்கு கீழாக குறைத்துள்ளது" என சரமாரியாக விமர்சித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications