யுபிஐ ஆப்களுக்கு ஆப்பா? சேவைகளுக்கு இனி தனி கட்டணமா? குழம்பிப் போன மக்களுக்கு வந்த கூல் பதில்!
டெல்லி : கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
கடந்த ஆண்டுகளைப் போல மக்கள் வங்கி சேவைகளைப் பெற தற்போதைய தொழில்நுட்ப உலகில் வங்கிகளுக்குச் செல்ல வேண்டியது இல்லை.
இருந்த இடத்திலேயே பணம் பெறுதல் அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்காக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் செயலிகள் இருக்கின்றன.

டிஜிட்டல் பணப்பரிமாற்றம்
டிஜிட்டல் பணப்பரிமாற்றம் சொல்ல முடியாத அளவுக்கு இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் காலையில் டீ குடிப்பதில் இருந்து, தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, உணவு ஆர்டர் செய்வது, பெட்ரோல் போடுவது, ஏன் பள்ளி கட்டணங்கள் உள்ளிட்ட பலவற்றுக்காகவும் யுபிஐ சேவை வழங்கப்படுகிறது.

யுபிஐ சேவை
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கூகுள் பே, போன் பே, அமேசான், பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் பணப்பனிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. யுபிஐ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பக்கம் இழுப்பதற்காக வவுச்சர்கள், மணி பேக், ஆஃபர்கள் என அள்ளித் தெளித்து வருகின்றன.

சேவை கட்டணம்
இந்நிலையில் ஒரே ஒரு வங்கி கணக்கு இருந்தால் போதும் எத்தனை முறை வேண்டுமாணாலும் பணம் அனுப்பலாம் என்ற நிலையில் தற்போது யுபிஐ பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வசூலிக்கும் முன்மொழிவை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியானது. இதனால் யுபிஐ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் சேவை வழங்கும் நிறுவனங்களும் பெரும் அதிர்ச்சியடைந்தன.

நிதி அமைச்சகம் விளக்கம்
இந்நிலையில் ஏற்கனவே ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் தான் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருவதாகவும் தற்போது இதற்கும் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களும் விவாதங்களும் எழுந்தது. இந்த நிலையில் யுபிஎஸ் சேவைகளுக்கு கட்டண வசூலிக்கும் எந்தவித பரிசுகளையும் அரசிடம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.. இந்த அறிவிப்பு வெளியான பிறகு யுபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் சேவை வழங்கும் நிறுவனங்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
அப்பாடா.. UPI பண மோசடிகளுக்கு செக்! இன்று முதல் புதிய நடைமுறை அமல்! ஆக்ஷனில் இறங்கிய என்பிசிஐ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications