டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 6 பேர் பலியான பரிதாபம்.. 11 பேர் காயம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஷாகிக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ஷாகிக் நகர் பகுதி அதிகம் மக்கள் வசிக்க கூடிய, நிறைய கடைகள் இருக்க கூடிய இடம் ஆகும். இங்குதான் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. ஜாமியா மில்லியா இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தூரத்தில்தான் இந்த கட்டிடம் உள்ளது.

Fire accident in Delhi residential building kills 5 people

இந்த சிறிய தீ விபத்து வேகமாக கட்டிடம் முழுக்க பரவியது. அது நான்கு மாடிகள் கொண்டு பெரிய கட்டிடம் ஆகும். கட்டிடம் முழுக்க தீ வேகமாக பரவியது.

இதன் உள்ளே சிலிண்டர்கள், தீ பற்ற கூடிய பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ வேகமாக பரவியது. இந்த நிலையில் இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினார்கள். மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

நேற்று இரவு மூன்று மணி நேரம் இந்த தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினார்கள். மொத்தம் 7 தீயணைப்பு வீரர்களின் குழுக்கள் தீயை அணைக்க கடுமையாக கஷ்டப்பட்டனர். ஆனாலும் தீ வேகமாக பரவியதால் உயிர் சேதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானார்கள். அதேபோல் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் இரவு முழுக்க போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 7 பைக்குகள், 3 கார்கள் எரிந்து நாசம் ஆகியது. காயமடைந்த 11 பேரும் தீவிரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+