அடிதூள்.. இந்தியாவுக்கு வெளியே அமையும் சென்னை ஐஐடி.. இதுதான் முதல்முறை.! ஏன் முக்கியம் தெரியுமா
டெல்லி: இந்தியாவில் டாப் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை ஐஐடியின் கேம்பஸ் இப்போது முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட உள்ளது.
நமது நாட்டில் கல்வியின் தரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போதும் உலகின் முக்கிய கல்வி நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் இருக்கவே செய்கிறது. குறிப்பாக நமது நாட்டின் ஐஐடி மற்றும் ஐஐஎம்களுக்கு சர்வதேச அளவில் முக்கிய இடம் இருக்கிறது.
இந்த கல்வி நிறுவனங்களில் படித்த பலரும் சர்வதேச அளவில் பல முக்கிய நிறுவனங்களில் டாப் பொறுப்பில் சென்று அமர்ந்துள்ளனர். அந்தளவுக்கு இந்தியக் கல்வி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கு வெளியே: இதற்கிடையே இந்தியாவுக்கு வெளியே முதல் ஐஐடி வளாகம் அமைய உள்ளது. இது கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தான்சானியாவின் சான்சிபார் என்ற இடத்தில் அமைய உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தான்சானியா சென்றுள்ள நிலையில், அவரும் அந்நாட்டின் அதிபர் ஹுசைன் அலி முவின்யி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்படும் முதல் ஐஐடி வளாகம் சான்சிபாரில் அமைக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம்: இது குறித்து இந்தியாவின் கல்வி அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ் மற்றும் சான்சிபாரின் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த வளாகம் இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பைப் பிரதிபலிப்பதாகவும் ஆப்பிரிக்காவில் உள்ள மக்களுடன் உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துவதையே இது காட்டுவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் "தான்சானியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை அங்கீகரித்து, சான்சிபார்- தான்சானியாவில் ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பது குறித்து இரு தரப்பிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் இதில் பாடங்கள் தொடங்கப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வி முறை: இது குறித்து கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "எதை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை இருக்கும் என்பதைச் சென்னை ஐஐடி தீர்மானிக்கும். இங்கே பட்டங்களும் சென்னை ஐஐடி மூலமே வழங்கப்படும். கல்வி முறை, பாடங்கள் ஆகியவற்றுக்கும் சென்னை ஐஐடி முழுமையாகக் கவனிக்கும் " என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் வளாகம் அமையும் இடம் உள்ளிட்ட அனைத்து வகையான ஆப்ரேடிங் செலவுகளை சான்சிபார்-தான்சானியா அரசு கவனித்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. இது தான்சானியா நாட்டில் இருக்கும் மக்கள் தரமான கல்வியை அடையப் பேருதவியாக இருக்கும்.
கல்வி அமைச்சர்: இந்தியக் கல்வி சர்வதேச மயமாக்குவதையே இது காட்டுவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆப்பிரிக்காவுடன் வலுவான உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டைக் காட்டுவதாகவே இது இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கைபடியே இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் சென்னை ஐஐடி வளாகம் கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இன் கீழ் சிறப்பாகச் செயல்படும் இந்தியப் பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் கேம்பஸ்களில் திறக்க ஊக்குவிக்க வேண்டும் என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications