ஃபிட் இந்தியா...விராட் கோலி...மிலிந்த் சோமனுடன் பிரதமர் மோடி உரையாடல்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டை முன்னிட்டு பிரதமர் மோடி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியுடன் காணொளி காட்சி மூலம் உரையாடினார். நாடு முழுவதிலும் இருக்கும் மக்களை தங்களது ஃபிட்னஸ் மூலம் ஈர்த்த பிரபலங்களுடன் இன்று மோடி உரையாடினார்.

இந்த வரிசையில் மாடலாக இருந்து பின்னர் மாரத்தான் வீரராக மாறிய மிலிந்த் சோமன், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடினார்.

Fit India Movement: PM Modi Interacts With Kohli on first anniversary

இன்று ஃபிட் இந்தியா நெறிமுறைகளை துவக்கி வைத்து, உடல் நல ஆரோக்கியத்தை இயற்கை வழியில் எவ்வாறு பேணுவது என்பதை விளக்கி பிரதமர் மோடி பேசினார். பிரதமர் தனது ட்விட்டரில் உடற்பயிற்சி ஆர்வலர்களுடன் உரையாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி தேவேந்திர ஜஜாரியா, காஷ்மீர் கால்பந்து வீரர் அஃப்சன் ஆசிக் ஆகியோரிடம் மோடி பேசினார். அவர்களது அனுபவங்களை கேட்டு அறிந்தார்.

மிலிந்த் சோமன், மன வலிமையின் முக்கியத்துவத்தையும், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடப்பது கடினமான காரியமல்ல என்றும் கூறினார். மேலும் இந்த சாதனையை நிறைவேற்ற ஒரு வலிமையான மனம் இருந்தால் மட்டுமே போதும், உடற்தகுதியை பெறுவதற்கான வரம்பு இல்லை. ஜிம் செல்லாமல், ஜூஸ் அருந்தாமலும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம் என்றார்.

கிரிக்கெட் பயிற்சி செய்வதற்கு தவறினாலும், உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு நாளும் தவறுவதில்லை என்று கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+