டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வி- ராகுல் காந்தியுடன் கலகக் குரல் குழுவின் மூத்த தலைவர் ஹூடா ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் அக்கட்சியின் அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

உ.பி, பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்று மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் மீண்டும் கலகக் குரல் வெடித்துள்ளது.

தேர்தல்கள் தோல்விக்குப் பொறுப்பேற்று சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மூவரும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக செயற்குழுவில் தெரிவித்தனர். ஆனால் இதனை மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராகவே சோனியா காந்தி நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

Five State Assembly Election Debacle: Bhupinder Singh Hooda meets Rahul

இந்நிலையில் காங்கிரஸ் கட்டமைப்பில் மாற்றம் தேவை என வலியுறுத்தும் ஜி23 அதிருப்தி தலைவர்கள் டெல்லியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதனிடையே சட்டசபை தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று 5 மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களை பதவி விலக வேண்டும் என சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான ஹரியானா முன்னாள் முதல்வர் பீபிந்தர் ஹூடா இன்று ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து மற்றொரு அதிருப்தி காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத்தையும் ஹூடா சந்தித்து பேசினார்.

காஷ்மீர் பைல்ஸ் என்ற பெயரில் ஆதாரமற்ற கட்டுக்கதை! உண்மை தெரியுமா? பாஜகவை விளாசும் காங்கிரஸ்!காஷ்மீர் பைல்ஸ் என்ற பெயரில் ஆதாரமற்ற கட்டுக்கதை! உண்மை தெரியுமா? பாஜகவை விளாசும் காங்கிரஸ்!

English summary
Former Haryana chief minister Bhupinder Singh Hooda today met Senior Congress leader Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X