Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்ஸிட் போல் முடிவுகள்: காங்கிரஸ் மீண்டும் எழவே முடியாதா? பாஜகவை எதிர்க்க 3வது அணியால்தான் முடியும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் சிறிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளன. ஆனால் பஞ்சாப், உ.பி மாநிலங்களில் பாஜக எதிர்காலத்தை ஆழக் குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் எக்ஸிட் போல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஏற்கனவே தேசிய அரசியலில் காங்கிரஸை புறந்தள்ளும் மாநில கட்சிகளின் புதிய கூட்டணி முயற்சிக்கு இம்முடிவுகள் உத்வேகத்தை தரக் கூடியவை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Recommended Video

    UP Exit Polls : மீண்டும் BJP தான் ஆட்சியை பிடிக்கும்.. வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்

    உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 5 மாநிலங்களில் உ.பி. தவிர இதர 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாகவே இருந்தது காங்கிரஸ். பஞ்சாப் மாநிலத்தில் பாஜக எத்தனையோ பகீர முயற்சிகள் கூட்டணி அமைத்தும் சிங்கிள் டிஜிட் இடங்களுக்கே அல்லாடும் பரிதாபத்தில்தான் இருக்கிறது.

    சரி இப்படியான நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் என்ன சொல்லி இருக்கின்றன? பாஜகவுக்கு வேரே இல்லாத மாநிலத்தில் காங்கிரஸ் கொடி கட்டிப் பறந்திருக்க வேண்டும். அப்படியான ஒரு செல்வாக்கை இப்போது ஆம் ஆத்மி கட்சியிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறது காங்கிரஸ். இன்னொரு பக்கம் பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட அகாலிதளம் கட்சியுடன் மல்லுக்கட்ட வேண்டிய பரிதாபத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ்.

    பஞ்சாப் காங்.

    பஞ்சாப் காங்.

    பஞ்சாப் மாநிலத்தில் 2012 சட்டசபை தேர்தலில் 46 இடங்களைப் பெற்றது காங்கிரஸ். 2017 சட்டசபை தேர்தலில் அதிரடியாக 77 இடங்களைக் கைப்பற்றியது. 2012 தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி என்பதே இல்லை. 2017 தேர்தலில் முதல் களத்திலேயே 20 இடங்களை அள்ளி அகாலிதளத்தை எதிர்க்கட்சி நிலையில் இருந்து தூக்கி அடித்தது ஆம் ஆத்மி. இப்போது நிலைமை அப்படியே தலை கீழாகப் போய்விட்டது. இத்தனைக்கும் 2012 தேர்தலில் பெற்ற இடங்களை கூட இம்முறை காங்கிரஸ் பெறாது என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.

    காங். வீழ்ச்சி ஏன்?

    காங். வீழ்ச்சி ஏன்?

    பொதுவாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளதன்படி ஆம் ஆத்மிக்கு 66 இடங்களும் காங்கிரஸுக்கு 25; அகாலிதளத்துக்கு 22; பாஜக கூட்டணிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்கின்றன. பாஜக மீது உச்சகட்ட அதிருப்தி கொண்ட மாநிலமாக இருந்து வருகிறது பஞ்சாப். குறிப்பாக விவசாயிகள் போராட்டம் கொழுந்துவிட்டு எரிய காரணமே பஞ்சாப் மாநிலம்தான். அப்படியான பின்புலத்தில் கூட அதாவது ஆதரவு தளம் இருந்தும் கூட காங்கிரஸ் கட்சி வாக்குகளாக அறுவடை செய்ய முடியாமல் அதளபாதாளத்தை நோக்கி விழுந்து கிடக்கிறது. இதற்கு காரணமே அதி உச்சமான உட்கட்சி மோதல்; கட்சி தலைவர்களிடையேயான தன்முனைப்பு பஞ்சாயத்துதான்.

    கோட்டைவிட்ட மணிப்பூர்

    கோட்டைவிட்ட மணிப்பூர்

    மணிப்பூரில் கடந்த 2017 தேர்தலிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அக்கட்சிக்கு முடிவுரை எழுத தொடங்கிவிட்டது பாஜக. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக அரசு மீது கடும் அதிருப்தி இருந்தது. மாநில முதல்வர்களை எல்லாம் மாற்றி மாற்றி அதிருப்தியை சரி செய்ய பாஜக போராடியது. பாஜக மீதான அதிருப்தியை அழகாக அறுவடை செய்திருக்க வேண்டும் காங்கிரஸ். ஆனால் அக்கப்போர் மோதல்களால் இங்கேயும் கோட்டைவிட்டுவிட்டது காங்கிரஸ் என்கிறது எக்ஸிட் போல் முடிவுகள்.

    கோவா காங். நிலவரம்

    கோவா காங். நிலவரம்

    இதேபோன்ற நிலைமைதான் கோவாவிலும்.. கோவாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க வேண்டிய நல்ல தருணம் கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் அக்கறை காட்டாத நிலையில் அல்லது அலட்சியம் காட்டிய நிலையில் கோவாவிலும் இழுபறியைத்தான் காங்கிரஸ் எதிர்கொண்டிருக்கிறது. இப்படி செல்வாக்கு பெற்ற இடங்களை பறிகொடுத்தும் வெல்ல வேண்டிய இடங்களில் விழுந்தும் கிடப்பதால் காங்கிரஸின் எதிர்காலம் குறிப்பாக தேசிய அரசியலில் அக்கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி; காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி என்கிற முழக்கங்கள், அதை நோக்கி நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸின் இத்தகைய செயல்பாடுகள், தேசிய அரசியலில் அந்த கட்சியை ஒரு ஓரமாக ஒதுக்கி வைக்கக் கூடிய சூழ்நிலையை அந்த கட்சியே உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதுதான் பெரும் பரிதாபம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+