1971 டிசம்பர் 3: ஆபரேஷன் செங்கிஸ்கான்-பாகிஸ்தானின் 93,000 வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்த சரித்திரம்!
டெல்லி: வரலாற்று பக்கங்களில் செங்கிஸ்கான் என்ற பெயரை படித்திருப்போம்.. 900 ஆண்டுகளுக்கு முந்தைய செங்கிஸ்கானை அறிந்த நாம் 52 ஆண்டுகளுக்கு முந்தைய ஆபரேஷன் செங்கிஸ்கான் அல்லது ஆபரேஷன் கெங்கிஸ்கான் பற்றி அதிகம் பேசியது இல்லை. பாகிஸ்தானின் 93,000 ராணுவ வீரர்கள் இந்திய தேசத்திடம் சரணடைய வித்திட்டதுதான் இந்த ஆபரேஷன் கெங்கிஸ்கான் அல்லது ஆபரேஷன் செங்கிஸ்கான்.
1947-ம் ஆண்டு நமது இந்திய தேசம் இந்தியா, பாகிஸ்தான் என இருநாடுகளாக துண்டாடப்பட்டது. பாகிஸ்தானும் மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இரு நிலப்பரப்புகளாக பிரிந்து கிடந்தன. மேற்கு பாகிஸ்தான் என்பது இன்றைய பாகிஸ்தான்; கிழக்கு பாகிஸ்தான் என்பது இன்றைய வங்கதேசம்.

ஒடுக்கப்பட்ட கிழக்கு பாகிஸ்தான்: கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பேசியது வங்க மொழி. மதத்தால் இஸ்லாமியர்களாக இருந்தாலும் மொழியால் வேறுபட்டவர்களாக கிழக்கு பாகிஸ்தான் நாட்டவர்கள் இருந்தனர். பாகிஸ்தான் எனும் நாடு உருவான காலம் முதலே கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு பாகிஸ்தான் அரசால் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டனர். இதன் விளைவாக கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாக விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை விளைந்தது. இதற்கு இந்திய அரசு ஆதரவாக நின்றது. ஏனெனில் வங்க மொழி பேசுகிற கிழக்கு பாகிஸ்தான் மக்களும் இந்தியாவின் மேற்கு வங்க மக்களும் தொப்புள் கொடி உறவானவர்கள் என்பதும் ஒரு காரணம். புவியியல் அடிப்படையில் மேற்கே இருந்த மேற்கு பாகிஸ்தானுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இந்தியாவின் கிழக்குடன் இணைந்த நிலப்பரப்பாகவும் இருந்தது.

பாகிஸ்தான் செய்தது என்ன?: கிழக்கு பாகிஸ்தான் விடுதலைப் போரின் பின்னணியில் இந்தியா இருந்தது மேற்கு பாகிஸ்தான் அரசை ஆத்திரமூட்டியது. இந்தியாவின் யுத்த வலிமையை குறைத்து மதிப்பிட்டு வந்த மேற்கு பாகிஸ்தான், வலிந்து இந்தியா மீது போரை தொடங்கியது. அந்த போர் தொடங்கிய நாள் டிசம்பர் 3. அந்த யுத்தத்துக்கு பாகிஸ்தான் சூட்டிய பெயர்தான் 'ஆபரேஷன் கெங்கிஸ்கான்' (ஆபரேஷன் செங்கிஸ்கான்).

ஆபரேஷன் கெங்கிஸ்கான்: ஆபரேஷன் கெங்கிஸ்கானை பாகிஸ்தான் எப்படி தொடங்கியது தெரியுமா? 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி ஒரே நேரத்தில் இந்தியாவின் 11 விமான படை தளங்கள் மீது சரமாரி தாக்குதல்களை நடத்தியது பாகிஸ்தான் விமானப் படை. அப்போது நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், பாகிஸ்தானின் விமானப் படை தாக்குதல் யுத்தத்துக்கான பிரகடனம். நமது இந்திய விமானப் படை பதிலடி கொடுத்திருக்கிறது. இனி இந்தியா முழு வீச்சில் பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தை நடத்தும் என அறிவிப்பு வெளியிட்டார். இப்படித்தான் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 1971-ம் ஆண்டு யுத்தம் தொடங்கியது.
கராச்சி காலி: 1971-ல் இந்தியா காட்டிய உக்கிரம் வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துகளில் இடம்பெற்றிருக்கிறது. நாட்டின் முப்படைகளும் முழு வீச்சில் பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தன. இந்தியாவின் பதிலடி என்பது பாகிஸ்தானின் இதயப் பகுதியான கராச்சி துறைமுகத்தை நிர்மூலமாக்கியது. 1971-ம் ஆண்டு டிசம்பர் 4,5 மற்றும் டிசம்பர் 8,9 ஆகிய நாட்களில் இந்திய கடற்படையின் முற்றுகையில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் சிக்கிக் கொண்டது. இதற்கு நமது நாடு வைத்த ரகசிய குறியீடுகள் டிரைடென்ட் மற்றும் பைத்தான் ஆகியவை ஆகும்.

பாகிஸ்தான் பதிலடி: பாகிஸ்தானும் இந்தியாவுக்கு சளைத்தது அல்ல என நிரூபிக்க ஐ.என்.எஸ். குக்ரி போர்க்கப்பலை ஹேங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் வழி தாக்குதல் மூலம் மூழ்கடித்தது. இந்தியாவை அதிகமாக கொந்தளிக்க வைத்தது இந்த நடவடிக்கைகள்.
13 நாட்கள் நீடித்த யுத்தம்: டிசம்பர் 8-ந் தேதியன்று மேற்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமான்ப் படை ருத்ரதாண்டவமாடியது. பாகிஸ்தான் விமானப் படையின் 60% விமானங்களை இந்திய விமானப் படை அழித்து சாதித்தது. இப்படியான யுத்தம் 13 நாட்கள் நீடித்தது. டிசம்பர் 3-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை இந்தியா- பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றது. இப்போரில் பாகிஸ்தான் தரப்பில் 8000 வீரர்கள் கொல்லப்பட்டனர். 25,000 பேர் படுகாயமடைந்தனர். இந்திய தரப்பில் 3,000 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 12,000 பேர் படுகாயமடைந்தனர்.

93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரண்: இப்போரின் முடிவில்தான் உலகமே அதிர்ந்து போகும் அந்த நிகழ்வும் நடந்தது. ஆம்.. 1971 டிசம்பர் 16-ந் தேதி பாகிஸ்தான் ராணுவ தளபதி அமீர் அப்துல்லா கான் நியாஸி தம்முடன் 93,000 பாகிஸ்தான் வீரர்களையும் அழைத்துக் கொண்டு இந்திய ராணுவத்திடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தார். அன்றைய நாளில்தான் கிழக்கு பாகிஸ்தான் எனும் நிலம் "பங்களாதேஷ்" "வங்கதேசம்" என்ற புதிய தேசமாக பூமிப் பந்தில் பிறந்தது. வங்கதேசம் எனும் சுதந்திர நாடு பிறந்தது. அன்றைய நாள் வங்கதேசத்தின் விடுதலை நாள். இந்திய சரித்திரத்தில் விஜய் திவாஸ் அல்லது வெற்றி தினம் என கொண்டாடப்படுகிறது.
செங்கிஸ்கானை நினைவில் வைத்து கொண்டிருப்பதைப் போல இந்தியர்கள் ஆபரேஷன் கெங்கிஸ்கானையும் மறந்துவிடக் கூடாது!
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications