Flash Back: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2023 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?
டெல்லி: 18-வது லோக்சபாவின் 2-வது கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்றைய நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையில், 2024-ம் ஆண்டு நிதியாண்டில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.
லோக்சபா தேர்தல் நடைபெற்ற காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக ஜனவர் 31-ந் தேதி நாடாளுமன்றத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.

2022-23-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:
- 2023-24 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களின் பாதையைப் பொறுத்து, ஜிடிபி வளர்ச்சி 6.0 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக இருக்கும்.
- உண்மையான அளவீட்டின் அடிப்படையில் 2024-ம் நிதியாண்டில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.
- மார்ச் 2023 முடிவடையும் ஆண்டில் பொருளாதாரம் 7 சதவீதத்தில் (உண்மை அளவுகளில்) வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய நிதியாண்டின் 8.7 சதவீத வளர்ச்சியின் தொடர்ச்சியாகும்
- 2022 ஜனவரி-நவம்பர் காலத்தில் சராசரியாக 30.5 சதவீதத்திற்கும் அதிகமாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறைக்கான கடன் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
- நிதி ஆண்டு 2023 இன் முதல் எட்டு மாதங்களில் 63.4 சதவிகிதம் அதிகரித்த மத்திய அரசின் மூலதனச் செலவு (CAPEX), வளர்ச்சிக்கு மற்றுமொரு உந்துதலாக இருந்தது.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது தனியார் நுகர்வு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகியவற்றால் முதன்மையாக வழிநடத்தப்பட்டது. மேலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் விரைவான நிகரப் பதிவு போன்றவற்றின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க உதவியதன் விளைவாக நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைவதையும் காண முடிந்தது
- 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில், நீட்டிக்கப்பட்ட அவசரக் கடன் இணைக்கப்பட்ட உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) ஆதரவுடன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறைக்கான கடன் வளர்ச்சி, சராசரியாக 30.6 சதவீதத்திற்கும் மேலாக, குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது. மத்திய அரசின். MSMEகளின் மீட்சி வேகமாக உள்ளது என்பதை அவர்கள் செலுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அளவுகளில் இருந்து தெளிவாகத் தென்படுகிறது.
- PM-Kisan மற்றும் PM Garib Kalyan Yojana போன்ற திட்டங்கள் நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியுள்ளன
- ஏற்றுமதித் தேவை அதிகரிப்பு, நுகர்வு அதிகரிப்பு மற்றும் அரசின் மூலதனச் செலவு ஆகியவை கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு/உற்பத்தி நடவடிக்கைகளில் மீண்டு வருவதற்குப் பங்களித்தாலும், அவற்றின் வலுவான இருப்புநிலைக் குறிப்பீடுகளும் அவர்களின் செலவினத் திட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகித்தன என்பது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.












Click it and Unblock the Notifications