புதிய மீன் பிடி துறைமுகங்கள்.. ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் மீன் ஏற்றுமதி.. நிர்மலா அறிவிப்பு
டெல்லி: மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது, நாடு முழுக்க புதிய மீன்பிடி துறை முகங்கள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது. இந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்த தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 3ம் கட்ட சிறப்பு திட்டங்களை இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். இதில் மீன்வளத்துறை தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
அதில், மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக பயன் அடைவார்கள். மீன்வள மேம்பாட்டிற்காக ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளுக்கு உள்கட்டமைப்புகளுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுக்க புதிய மீன்பிடி துறைமுகங்கள் கட்டப்படும். இதற்கான தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
கூடுதலாக 70 லட்சம் மீன் உற்பத்தியை எட்ட அரசு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அந்த இலக்கு எட்டப்படும். இதன் காரணமாக ஏராளமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications