டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளியானது போர்ப்ஸ் டாப் 10 பிரபலங்கள் பட்டியல்.. நடிகர்களை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்தார் கோலி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார் மற்றும் சல்மான் கான் ஆகியோரை வீழ்த்தி ஃபோர்ப்ஸ் 2019 டாப் செலிப்ரட்டி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

அக்‌ஷய் குமாரை விட குறைவாக சம்பாதித்த போதிலும் இந்திய கேப்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இந்தியா செலிபிரிட்டி 100 பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் ஒரு நடிகர் இந்த பட்டியலில் டாப் இடத்தை கைப்பற்றத் தவறியது இதுதான் முதல்முறை என்பது சிறப்பு.

பல வகை ஊதியம்

பல வகை ஊதியம்

31 வயதான விராட் கோலி, 2018 அக்டோபர் 1 முதல் 2019 செப்டம்பர் 30 வரை போட்டிக் கட்டணம், பிசிசிஐ மத்திய ஒப்பந்தம், பிராண்ட் அக்ரிமென்ட்கள் மற்றும் ஒவ்வொரு ஸ்பான்சர் இன்ஸ்டாகிராம் பதிவிற்கும் கோடிகளில் ஊதியம் வாங்குவது என பல வகைகளில் சம்பாதித்துள்ளார். இந்த வருடம் அவர் மொத்தம், ரூ .252.72 கோடி சம்பாதித்துள்ளார்.

பெண்கள்

பெண்கள்

அக்‌ஷய் குமார் 293.25 கோடி ரூபாய் வருமானத்துடன் 2வது இடத்தைப் பிடித்தார், 2016 முதல் முதலிடம் வகித்த சல்மான் கான் 3-வது இடத்திற்கு சென்றுள்ளார். நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகிய இரு பெண்கள் இது முதல் தடவையாக டாப் 10 இடங்களுக்குள் நுழைய முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டின் 100 பிரபலங்கள் கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகம் சம்பாதித்துள்ளனர், அவர்களின் வருவாய் 2018 ஆம் ஆண்டில் ரூ .3,140.25 கோடியிலிருந்து இப்போது 3,842.94 கோடியாக உயர்ந்துள்ளது.

பட்டியல் இதோ

பட்டியல் இதோ

ஃபோர்ப்ஸ் 2019 சிறந்த பிரபலங்களின் பட்டியல்: 2019 இல் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 பெயர்கள்:

1. விராட் கோலி - ரூ .252.72 கோடி

2. அக்‌ஷய் குமார் - ரூ .293.25 கோடி

3. சல்மான் கான் - ரூ .229.25 கோடி

4. அமிதாப் பச்சன் - ரூ .239.25 கோடி

5. எம்.எஸ் தோனி - ரூ .135.93 கோடி

6. ஷாருக் கான் - ரூ .124.38 கோடி

7. ரன்வீர் சிங் - ரூ .118.2 கோடி

8. ஆலியா பட் - ரூ .59.21 கோடி

9. சச்சின் டெண்டுல்கர் - ரூ .76.96 கோடி

10. தீபிகா படுகோனே - ரூ .48 கோடி

ஏன் முதலிடம்

ஏன் முதலிடம்

வருவாய் ஒப்பீட்டில், குறைவாக உள்ளபோதிலும், விராட் கோலி ஏன் அக்ஷய் குமாரைவிட ஒரு இடம் முன்னே பெற்றுள்ளார் என்பதற்கு ஃபோர்ப்ஸ் விளக்கம் அளித்துள்ளது. இந்த தரவரிசை என்பது வருவாயின் மொத்தத்தையும் மட்டுமின்றி, அவற்றின் புகழ் அளவையும் அடிப்படையாகக் கொண்டது, பிரின்ட் மற்றும் சமூக ஊடகங்களின் வழியாக இது கணக்கெடுக்கப்படுகிறது. இவ்வாறு ஃபோர்ப்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

English summary
The Indian cricket team captain Virat Kohli has beaten Bollywood superstars Akshay Kumar and Salman Khan to bag the top spot in the Forbes 2019 Top Celeb List.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X