இந்தியாவின் பாதுகாப்பு கவசம் பத்திரமாக இருக்கிறது.. பாகிஸ்தான் பரப்பும் போலி செய்தியை நம்ப வேண்டாம்
டெல்லி: இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்400 மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் வதந்தி பரப்பி வருவதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார். எஸ்400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறிய விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இந்த தாக்குதலில் 100க்கும் மேலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. எல்லையோர பகுதிகளான ஜம்மு, காஷ்மீர், பூஞ்ச், ஜெய்சல்மார், பஞ்சாப், குஜராத் என்று பல்வேறு மாநிலங்களிலும் டிரோன்களை கொண்டும், ஏவுகணைகளை கொண்டும் பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதுவரை 400க்கும் அதிகமான டிரோன்களை பாகிஸ்தான் ஏவி இருக்கிறது.
அதனை இந்திய பாதுகாப்பு படை எஸ்400 சுதர்சன் சர்கா என்ற வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக, அந்த டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா வானிலேயே அழித்தது. இதுவரை ஒரு டிரோன் கூட எஸ்400 சுதர்சன் சக்ராவிடம் இருந்து தப்பவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு நடந்த தாக்குதலில், பாகிஸ்தானின் டிரோன்கள் எஸ்400 சுதர்சன் சக்ராவை அழித்துவிட்டதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் அதனை உடனடியாக பாதுகாப்புத்துறை மறுத்து, பாகிஸ்தான் வதந்தி பரப்பி வருவதாக விளக்கம் அளித்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு இந்தியாவை சீண்டுகிறது.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்தியா அளவான பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அனைத்து வகையான முயற்சிகளையும் இந்தியா முறியடித்துள்ளது. அதேபோல் எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாகிஸ்தான் தாக்குதலில் எஸ்400 அமைப்பு சேதமானதாக கூறப்படுவது ஆதரமற்றது என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications