பாஜகவை மெர்சலாக்கும் மாஜி ஆளுநர் சத்யபால் மாலிக் விவகாரம்- 8 இடங்களில் சிபிஐ ரெய்டு!
டெல்லி: புல்வாமா தாக்குதலில் மத்திய அரசை விமர்சித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்தியபால் மாலிக்கின் ஊடக ஆலோசகர் தொடர்புடைய 8 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சத்யபால் மாலிக்.. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அண்மைக்காலமாக தலைவலியாக உருவெடுத்திருப்பவர். சரண் சிங் தலைமையிலான பாரதிய கிராந்தி தளம் மூலம் 1974-ம் ஆண்டு அரசியலில் எம்.எல்.ஏ.வாக நுழைந்தவர் சத்யபால் மாலிக். பின்னர் காங்கிரஸ், ஜனதா தளம் வழியாக பாஜகவில் இணைந்தார்.
2004-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த சத்யபால் மாலிக், 2012-ல் பாஜகவில் அகில இந்திய துணைத் தலைவரானார். 2017-ம் ஆண்டு பீகார் ஆளுநர் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களின் ஆளுநர் பதவியும் வகித்தார் சத்யபால் மாலிக். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேகாலயா ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் அவர்.
#WATCH | Delhi: CBI raid underway at the residence of Sunak Bali, the then press secretary of former J&K Governor Satyapal Malik, in connection with an alleged insurance case. pic.twitter.com/iTYaZloekp
— ANI (@ANI) May 17, 2023
தற்போது 76 வயதாகும் சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு மத்திய அரசுதான் என பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில ஊழல்கள் குறித்தும் சத்யபால் மாலிக் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி இருந்தார். இதனால் சிபிஐ விசாரணையையும் சத்யபால் மாலிக் எதிர்கொண்டார். தற்போது அவரது ஊடக ஆலோசகருக்கு தொடர்பான மொத்தம் 8 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பின்னர்












Click it and Unblock the Notifications