தொடர் மதவெறி பதிவுகள்.. கேரள முன்னாள் டிஜிபி என்.சி.அஸ்தானாவின் கணக்கை முடக்கிய ட்விட்டர்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்து மிக அழகான காட்சி என பாராட்டிய ஓய்வுபெற்ற கேரள முன்னாள் டிஜிபி என்.சி.அஸ்தானாவின் கணக்கை மதவெறி பதிவுகளுக்காக ட்விட்டர் முடக்கியுள்ளது.
1986 பேட்ச் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியான நிர்மல் சந்திரா அஸ்தானா, எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் காவல் படை உள்ளிட்டவற்றில் உயர் பொறுப்புகளை வகித்தவர்.
கேரள மாநில ஊழல் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராகவும், டிஜிபியாகவும் பதவி வகித்த அவர் 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

உபி போலீசாரின் கொடூர தாக்குதல்
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாக பேசியதை கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கைது செய்து காவல்துறை கொடூரமாக தாக்கியதுடன் அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

’மிக அழகான காட்சி”
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதில் ஒன்றை ட்விட்டரில் பகிந்துள்ள என்.சி.அஸ்தானா, மிக அழகான காட்சி என வர்ணித்து இருந்தார். உத்தரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை மனதுக்கு ஆறுதல் தருவதாகவும் அம்மாநில டிஜிபி டி.எஸ்.சவுஹானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ள அவர், சட்டத்தை காலில் போட்டு மிதிப்பவர்களை நொறுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் மீது விமர்சனம்
மற்றொரு பதிவில், உத்தரப்பிரதேச போலீசார் போராட்டக்காரர் ஒருவரை லத்தியால் தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "காவல்துறையில் பாலிகார்பொனேட் பைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளுக்காக வருந்துகிறேன். பழைய ஆளி விதை எண்ணெயில் ஊறவைக்கப்பட்ட மூங்கில் லத்திகள் சிறப்பாக இருந்தன." என்று தெரிவித்து இருக்கிறார். அடுத்த பதிவில் யோகி ஆதித்யநாத்தை மஹாராஜ் ஜி, என்றும் பத்திரிகையாளர்களை கழுதைகள், முட்டாள்கள் என்று விமர்சித்து உள்ளார்.

ட்விட்டர் கணக்கு முடக்கம்
இதுபோது தொடர்ந்து மனித உரிமைகள், சிறுபான்மையினர்களுக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டு வந்த என்.சி.அஸ்தானாவுக்கு பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறை, நிர்வாகத்துறை அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அவரது ட்விட்டர் பதிவுகளையும் பலர் புகார் செய்திருந்தனர். இந்த நிலையில் அவரது கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கி இருக்கிறது.

ஆறே மாதத்தில் மாற்றம்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ஆங்கில செய்தி இணையதளத்தில் போலீஸ் சித்திரவதைகளுக்கு எதிராக என்.சி.அஸ்தானா கட்டுரை எழுதி இருந்தார். இந்த நிலையில் ஆறே மாதத்தில் போலீசாரின் கொடூர தாக்குதல்களை பாராட்டியும் வர்ணித்தும் ட்விட்டரில் தொடர் பதிவுகளை வெளியிட்டு தற்போது அவரது கணக்கு முடக்கப்பட்டு இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications