"எனக்கு பென்ஷன் வேண்டும்!" மாஜி துணை ஜனாதிபதி தன்கரிடம் இருந்து பறந்த லெட்டர்.. எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்
டெல்லி: நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் திடீரெனத் தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நிலையைக் காரணமாகச் சொல்லி அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் அவரை பற்றி சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஜி குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமாவுக்குப் பிறகு எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கிடையே மாஜி துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

ஜெகதீப் தன்கர்
ஆளுநர், துணை குடியரசு தலைவர் பதவிகளை வகிக்கும் முன்பு அவர் ராஜஸ்தானில் எம்எல்ஏவாக இருந்தவர். அதன் அடிப்படையில் அவர் எம்எல்ஏ ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும் பணிகளை ராஜஸ்தான் சட்டப்பேரவைச் செயலகம் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துணைக் குடியரசுத் தலைவர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்த தன்கர், 1993ல் நடந்த ராஜஸ்தான் தேர்தலில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். 1998 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த தன்கர், 1994 முதல் 1997 வரை சட்டப்பேரவை குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். அதன் பிறகே அவர் 2003ல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார்.
எவ்வளவு கிடைக்கும்
ஜெகதீப் தன்கருக்கு இப்போது 74 வயதாகும் நிலையில், அவருக்கு 20% ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்படும். அதன்படி அவருக்கு மாதந்தோறும் ₹35,000க்கு பதிலாகச் சுமார் ₹42,000 ஓய்வூதியம் கிடைக்கும். எதிர்காலத்தில் அவர் 80 வயதைத் தாண்டும்போது, விதிகளின்படி அவரது ஓய்வூதியத் தொகை 30 சதவீதம் அதிகரிக்கும்.
எப்போது கிடைக்கும்
அதாவது பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதியாகத் தேர்வானார். அவர் இப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாக இருந்ததற்கு ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்திருக்கிறார். ஜெகதீப் தன்கரின் விண்ணப்பத்தை தாங்கள் பெற்றுள்ளதை ராஜஸ்தான் சட்டசபை தலைவர் வாசுதேவ் தேவநானி உறுதி செய்துள்ளார். இந்த விண்ணப்பத்தின் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அனைத்துப் பணிகள் முடிந்ததும் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர் மிக நீண்ட ஒரு பொது வாழ்கையைக் கொண்டுள்ளார். ராஜஸ்தானில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியதுடன், மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார். அதாவது காங்கிரஸில் 1992ல் சேர்வதற்கு முன்பு அவர் ஜனதா தள கட்சியில் இருந்தார். அப்போது எம்பியாக இருந்த ஜெகதீப் தன்கர், 1990- 1991 வரை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2003ம் ஆண்டு பாஜகவில் இணைந்த இவருக்கு 2019ல் மேற்கு வங்க ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் மேற்கு வங்க ஆளுநராக இருந்த அவர், அதன் பிறகு இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியைப் பெற்றார். ஓய்வூதியத்திற்கான தனது விண்ணப்பத்துடன், ராஜஸ்தான் சட்டசபையில் இருந்து பிற ஓய்வூதியப் பலன்களைப் பெறவும் அவர் விண்ணப்பித்துள்ளார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்












Click it and Unblock the Notifications