உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 21,96,956- பிரான்சில் 2,14,542 பேருக்கு தொற்று
டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,96,956 ஆகும். இதில் பிரான்சில்தான் அதிக அளவாக 2,14,542 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உலக நாடுகளில் கொரோனா 4-வது அலையும் இந்தியாவில் கொரோனா 3-வது அலையும் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 21,96,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உலகம் நாடுகளில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 8,072 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20,41,448 ஆகும்.
இதனையடுத்து உலகம் முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 393,536,754 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,751,584 ஆகவும் அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 312,643,874. உலக நாடுகளிலேயே பிரான்சில்தான் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக பதிவாகி உள்ளது. பிரான்சில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,14,542 ஆகும்.
பிரான்ஸை தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி, பிரேசிலில் அதிக கொரோனா பாதிப்பு நேற்று பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் 177,282; ஜெர்மனியில் 166,620; பிரேசிலில் 154,240 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.
அதேநேரத்தில் உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 1051 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவைத் தொடர்ந்து ஒருநாள் கொரோனா மரணங்களில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 865 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். பிரேசிலில் நேற்று 800 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்ட வைரஸ் பாதிப்பை தடுக்க முழு வீச்சில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டும் வருகின்றன. இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி, தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மொத்தம் 168.98 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications