விடாமல் நெருக்கும் எதிர்க்கட்சிகள்.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க கோரி புதிய நோட்டீஸ்!
டெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை, பதவியிலிருந்து நீக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் புதிய தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 எம்.பி-க்கள் கையெழுத்திட்ட புதிய நோட்டீஸ், மாநிலங்களவைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் மாதம் 193 எம்.பி-க்களின் ஆதரவுடன் அளிக்கப்பட்ட இதே போன்ற நோட்டீஸ், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்திருக்கின்றனர். இந்தமுறை ஞானேஷ்குமார் மீது புதியதாக 9 குற்றச்சாட்களையும் அவர்கள் முன்வைத்திருக்கின்றனர்.
மேற்கு வங்கம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, ஆளும் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதுதான் 9 குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானதாகும்.
அதேபோல, தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் விருப்பப்படி செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றனர். குறிப்பாக, தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கின்றனர்.
என்னதான் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் மேல் நோட்டீஸ் கொடுத்தாலும் கூட, அவ்வளவு சீக்கிரத்தில் தலைமை தேர்தல் பொறுப்பில் இருப்பவரை தூக்கிவிட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்குவது என்பது உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கு இணையான கடினமான நடைமுறையாகும்.
ஆணையரை நீக்கவே, மக்களவையில் குறைந்தது 100 எம்பிக்களும், மாநிலங்களவையில் 50 எம்பிக்களும் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த ஆதரவு கிடைத்த பின்னர், தீர்மானம் ஏற்கப்பட்டால், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒரு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் ஒரு சட்ட வல்லுநர் அடங்கிய குழு விசாரணை நடத்தும்.
குழுவின் அறிக்கை அடிப்படையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மை (Special Majority - மொத்த உறுப்பினர்களில் 50% மேல் மற்றும் வாக்களிப்பவர்களில் 2/3 பங்கு) மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஜனாதிபதி அவரை நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் என்னதான் முயற்சி எடுத்தாலும், ஆணையரை நீக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications