2 வருடங்களுக்கு பின்.. இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கம்.. மாஸ்க் அணிய வேண்டுமா?
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொடர்பான முக்கியமான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது. இன்றிலிருந்து முழு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
Recommended Video
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்னிக்கை 4,30,24,440 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 14,307 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியா கொரோனா
இந்தியாவில் புதிதாக கொரோனா அலைகள் ஏற்படாத நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது . இந்த மாத தொடக்கத்தில் இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பினார். அதில், மாநில அரசுகள் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து கொரோனா தொடர்பான அனைத்து விதமான தேசிய பேரிடர் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

கொரோனா கட்டுப்பாடு
அதற்கு முன்பு வரை மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் வாபஸ் வாங்கப்படுவதாக அறிவித்தார். இந்த நிலையில்தான் இன்று முதல் நாடு முழுக்க முழுமையாக கொரோனா தளர்வுகள் அமலுக்கு வருகின்றன, அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேசிய அளவில் விதிக்கப்பட்ட பேரிடர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இனி நாடு முழுக்க கூட்டங்கள் நடத்த முடியும்.

கூட்டங்கள் நடத்தலாம்
திருமணங்களில் கூட்ட கட்டுப்பாடு இல்லை. பள்ளிகள், கல்லூரிகள் இயல்பாக இயங்க முடியும். அதாவது 2 வருடங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா காரணமாக போடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. அதே சமயம் மாஸ்க், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மட்டும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் மாஸ்க் தொடர்ந்து அணி வேண்டும்.

மாஸ்க்?
அதேபோல் கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் தொடரும். இருப்பினும் பல மாநிலங்களில் இந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளது. மாஹராஷ்டிராவில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாஸ்க் தளர்வு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications