சோனியாவிற்கு அதிகரிக்கும் அழுத்தம்.. டெல்லியில் ஜி 23 தலைவர்கள் அவசர கூட்டம்.. காங்கிரசில் மோதல்!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்பாக காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி தலைமைக்கு எதிராக குரல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்த நிலையில் காங்கிரசில் அதிருப்தியில் உள்ள ஜி 23 தலைவர்களில் 21 தலைவர்கள் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் வலுவான ஒற்றை தலைமை வேண்டும். வலுவான முடிவுகளை எடுக்க வேண்டும். கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடந்த 2020ல் கடிதம் எழுதினார்கள். இந்த 23 தலைவர்கள்தான் ஜி 23 தலைவர்கள்.
அதன்பின் நடத்தப்பட்ட காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதோடு விரைவில் கட்சி தேர்தல் நடத்தப்படும், தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று உறுதி அளிக்கப்பட்டாலும் தேர்தல் நடத்தப்படவில்லை.

மாற்றம் இல்லை
கட்சியிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெரிதாக மாற்றம் இன்றியே காங்கிரஸ் கட்சி பஞ்சாப், கோவா, உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், ஆகிய மாநில தேர்தல்களை சந்தித்தது. ஆனால் இந்த 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் ஜி 23 தலைவர்கள் எனப்படும் மூத்த தலைவர்கள் இணைந்து அவசர கூட்டம் நடத்தினர். காங்கிரசின் தோல்வி குறித்த விவாதம் நடத்துவதற்காக இவர்கள் கூடினார்கள்.

ஆலோசனை கூட்டம்
இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், அனந்த் சர்மா, மனிஷ் திவாரி , குலாம்நபி ஆசாத் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவில் இருந்த ஜிதின் பிரசாத், யோகானந்த சாஸ்திரி ஆகியோர் ஏற்கனவே காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் 21 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி, வலு இல்லாத தலைமை என்று பல விஷயங்கள் பற்றி இதில் ஆலோசனை செய்யப்பட்டது.

காரிய கமிட்டி கூட்டம்
இதையடுத்து உடனே சோனியா காந்தி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்கிறார் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதே சமயம் கட்சியில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் இந்த முடிவை ஜி 23 தலைவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கபில் சிபல் எதிர்ப்பு
அதிலும் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சி ஒரு வீட்டிற்கான கட்சியாக இருக்க கூடாது. அது எல்லோருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதோடு காங்கிரஸ் தலைமை பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி குடும்பம் வெளியேறி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சோனியா ஆதரவாளர்கள் இடையே கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.

டெல்லி காங்கிரஸ்
அவருக்கு எதிராக டெல்லி காங்கிரசில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று ஜி 23 தலைவர்கள் கூட்டம் கபில் சிபல் வீட்டில் நடப்பதாக இருந்தது. ஆனால் அவர் மீதான இந்த எதிர்ப்பு காரணமாக அவர் வீட்டில் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக டெல்லியில் இருக்கும் குலாம் நபி ஆசாத் வீட்டில் இன்று ஜி 23 தலைவர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. கபில் சிபல், சசி தரூர், ஆனந்த் சர்மா, மனிஷ் திவாரி, பூபிந்தர் ஹூடா, ராஜிந்தர் கவுர் பட்டல், அகிலேஷ் பிரசாத் சிங், பிருத்விராஜ் சவான், பி.ஜே. குரியன், மணி சங்கர் ஐயர், குல்தீப் சர்மா மற்றும் ராஜ் பப்பர் ஆகியோர் இன்று நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

நீக்கம்
காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து இவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்றுதான் உபி, உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதையடுத்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து இன்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications