மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை.. ஜனாதிபதி முதல் பிரதமர் வரை மலர்தூவி அஞ்சலி
டெல்லி: காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்கா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நம் நாடு அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் மகாத்மா காந்தி தான். அவரது பிறந்தநாளான அக்டோபர் 2 ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலையில் பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மனித வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த அன்பு பாபுவின் (மகாத்கா காந்தி) வாழ்க்கைக்கு மரியாதை செலுத்துவது தான் காந்தி ஜெயந்தி. துணிச்சலும், எளிமையும் எப்படி பெரிய மாற்றத்துக்கான கருவிகளாக மாறும் என்பதை அவர் நிரூபித்தார். சேவையின் அதிகாரம் என்பது பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை இரக்கத்துடன் வழங்குவது தான் என்று அவர் நம்பினார். அவரது பாதையில் நாமும் ‛விக்சித் பாரத்'தை நோக்கி பயணிப்போம்'' என்றார்.

அதேபோல் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பல தலைவர்கள் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி ஜெயந்தியையொட்டி அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தியின் சிலை மற்றும் போட்டோக்களுக்கு பலரும் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications