டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் ஓட்டு போட்டுட்டேன்.. அப்ப நீங்க.. சர்ச்சை நாயகன் கவுதம் காம்பீரின் டுவீட் #GoVoteDelhi

Google Oneindia Tamil News

டெல்லி: நான் ஓட்டு போட்டுவிட்டேன். நீங்களும் ஓட்டு போடுங்கள் என கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கவுதம் காம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

கடும் வெயில் காரணமாக பல இடங்களில் வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிக்க குவிந்தனர். அதுபோல் பிரபலங்களும் குவிந்தனர். டெல்லியை பொருத்தமட்டில் டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மற்றும் அடிஷி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

மோடி வெறுப்பை உமிழ்கிறார்.. நான் அன்பை அளிக்கிறேன்.. கடைசியில் அன்புதான் வெல்லும்.. ராகுல் பளீர்! மோடி வெறுப்பை உமிழ்கிறார்.. நான் அன்பை அளிக்கிறேன்.. கடைசியில் அன்புதான் வெல்லும்.. ராகுல் பளீர்!

வெள்ளை குர்தா

வெள்ளை குர்தா

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்த இவருக்கு அக்கட்சியின் சார்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து இன்று கவுதம் காம்பீர் வெள்ளை நிற குர்தா அணிந்து கொண்டு தனது மனைவி நடாஷா ஜெயினுடன் வாக்களிக்க வந்தார்.

புகைப்படம்

பழைய ராஜேந்திர நகரில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் சாலை 7 மணிக்கே வந்த அவர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்களித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் காம்பீர். பின்னர் அவர் கூறுகையில் நான் வாக்களித்துவிட்டேன். இது நீங்கள் வாக்களிக்க வேண்டிய தருணம். டெல்லி மக்களே அனைவரும் சென்று வாக்களியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காம்பீர் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவரை எதிர்த்து கிழக்கு டெல்லி எம்பி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் அடிஷியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து துண்டுப்பிரசுரங்களை காம்பீர் வெளியிட்டதாக தேர்தல் ஆணையத்தில் அடிஷி புகார் அளித்துள்ளார்.

வாக்கு

வாக்கு

வாக்களிக்கும் நாளுக்கு முந்தைய வாரம் முழுவதும் அடிஷி மற்றும் காம்பீர் சண்டை பூதாகரமாக வெடித்து வருகிறது. காம்பீருக்கு இரு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக அடிஷி தெரிவித்தார். ஆனால் காம்பீரோ தனக்கு பழைய ராஜேந்திர நகரில் மட்டுமே வாக்கு இருப்பதாக தெரிவித்தார்.

ஆம் ஆத்மி புகார்

ஆம் ஆத்மி புகார்

அது போல் வெயிலை தவிர்க்க தன்னை போலவே இருக்கும் மற்றொருவரை பிரசாரத்துக்கு காம்பீர் பயன்படுத்துவதாகவும் அவர் ஏசி காரில் உள்ளே உட்கார்ந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சோடியா புகார் அளித்தார். இதை நிரூபித்தால் தான் தூக்கி தொங்க தயார் என காம்பீர் பதில் அளித்தார். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் கவுதம் காம்பீர் வாக்களித்துவிட்டு சென்றார்.

English summary
Cricketer turn Politician Gautam Gambhir tweeted after his voting that Done my bit !! It’s your turn now. Go Vote Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X