தங்கத்தில் நகைகள் அணிய கூடாது.. தாலி தவிர காஸ்ட்லி நகை அணிந்தால் ரூ.50000 அபராதம்.. சமத்துவம் முடிவு
டெல்லி: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.. உலக சந்தையின் நிலைமை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனாலும், ஏழை, எளிய மக்களால் தங்கத்தை நினைத்துகூட பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், உத்தரகாண்ட் மாநிலத்தின் செய்தி ஒன்று அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.
திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு: உத்தரகாண்ட் கிராமத்தில் விதி மீறினால் ரூ.50,000 அபராதம்.

தங்க நகைகள் என்றாலே பெண்களுக்கு மகிழ்ச்சியும், ஆசையும்தான். அதிலும் திருமண வைபவத்தின்போது, ஏராளமான நகைகளை அணிவதில் பிரியப்படுவார்கள்.. ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்க நகைகள் அணிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன..
ஜான்சர் - பவார் பகுதியிலுள்ள கந்தார் என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள்.. இந்த கிராமத்தில்தான், பெண்கள் தங்க நகைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது..
மூக்குத்தி, தாலி, கம்மல்
பழங்குடியின தலைவர்களின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள் சிம்பிளான தங்கத்தை அணியலாம். அதாவது தங்கத்தில் கம்மல், மூக்குத்தி, தாலி போன்றவற்றை மட்டுமே அணியலாம்.
மற்றபடி ஆடம்பரமான தங்க நகைகள் அதாவது ஆரம், நெக்லஸ் போன்ற பெரிய பெரிய தங்க நகைகளை இனிமேல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் அணிய கூடாது. அணிய கூடாது, மீறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று கிராம தலைவர்கள் அதிரடியாக அறிவித்தனர்.
காஸ்ட்லி நகைக்கு தடை
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.. ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்கி சிக்கி கொள்கிறார்கள்.. இதனால் சேமிப்பும் குறைந்துவிடுகிறது.
திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு. அது பகட்டான காட்சி மேடை கிடையாது. அதனால்தான், பணக்காரர், ஏழை குடும்பங்களுக்கு இடையேயான வெளிப்படையான நுகர்வை குறைப்பது, தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது, சமூக ஒற்றுமையை வளர்ப்பது போன்ற நோக்கங்களுக்காக இந்த தங்க நகை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் அபராதம்
இந்த வழிகாட்டுதலை மீறும் எந்த பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு சுந்தர் கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிற்கும் கட்டாயமாகும். இந்த முடிவை கிராம மக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஏழை, எளிய மக்கள் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது. ஆடம்பரச் செலவு செய்வது, தங்க நகைகளைப் போட்டுக்கொண்டு தங்கள் பணக்காரத்தனத்தைக் காட்டுவது போன்றவற்றை தடுக்கவும், ஆடம்பரக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமத்துவம் - வரவேற்பு
சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியம். திருமண மேடை ஒருபோதும் செல்வம் காட்டும் மேடையாக மாற கூடாது.. இதனை மதித்து நடந்தால் சமூகத்தில் சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. இது தொடர்பான விவாதங்களும் சோஷியல் மீடியாவில் நடத்தப்பட்டு வருகின்றன.. பெரும்பாலானோர் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர்.. சமத்துவம் இப்படியாவது நிலவினால் சரி என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications