அடிச்சு தூக்க போகுது இந்தியா..’இங்கே’ கொட்டி கிடக்குது தங்கக் குவியல்! இனி சீனாவெல்லாம் ஒன்னுமே இல்ல
டெல்லி: உலகளவில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கும் நிலையில், தங்கம் எங்கிருக்கிறது என உலக நாடுகள் தேடி வருகின்றன. இந்தியாவின் அண்டை நாடான சீனாவில், தங்கம் இருப்பது தெரிய வந்திருக்கும் நிலையில், உலக அளவில் சீனா பொருளாதார வல்லரசாக மாறும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனை வெட்டி எடுப்பதற்கான ஏலம் விரைவில் தொடங்கவுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகள் மீது வர்த்தக போர் தொடுத்திருக்கிறார். குறிப்பாக சீனா, கனடா, மெக்ஸிகோ, இந்தியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கு எதிராக பதிலுக்கு பதில் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார்.

இதனால் உலகம் முழுவதும் பொருளாதார பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3000 டாலரை கடந்திருப்பது கவனிக்கத்தக்கது.
உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் ஆபரணத்துக்காகவும் சேமிப்புக்காகவும் தங்கம் வாங்கப்படுகிறது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் சிறந்த முதலீடாக தங்கத்தில் முதலீடு செய்வது பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகள், சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சீனர்களும் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர்.
முதலீடு மட்டும் அல்லாமல், தங்கள் நாடுகளில் தங்கம் இருக்கிறதா என பல உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூனான் மாகாணத்தில் வாங்கு தங்க சுரங்கத்தில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குவியல் மறைந்து கிடப்பதை சீனா ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த தங்கம் வெட்டி எடுக்கப்படுவதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக சீனா உருவாகும் என ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தியாவிலும் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் சுந்தர்கர், நபரங்பூர், அங்குள், கொராபுட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில சுரங்கத்துறை அமைச்சரான பிபூதி பூஷன் ஜனா கூறி இருக்கிறார். முதல் கட்ட ஆய்வில் மேற்கண்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது மால்கன்கிரி, சம்பல்பூர், போத் போட்ட ஆகிய மாவட்டங்களிலும் தங்க படிமங்கள் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும், கியோன்ஞ்சர், மயூர் பஞ்ச் போன்ற மாவட்டங்களில் தங்கம் இருக்கிறதா என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகி உள்ள தகவல் படி முதன் முறையாக தங்கம் வெட்டி எடுப்பதற்கான ஏலம் தியோகர் பகுதியில் விடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜெசிப்பூர், சரியக்குடா, ருவான்சி, ஐடெல் குச்சா, மருதி, சுளிபட், பதம்பகத் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கெல்லாம் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் தங்கச்சுரங்கத்தில் மையமாக ஒடிசா மாறும். அதுமட்டுமல்லாமல் தாமிரம், மேக்னசைட் உள்ளிட்ட பல்வேறு தனிமங்களும் அங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதை எடுத்து முதல் முறையாக ஒடிசா தங்க சுரங்க ஏலத்தை விட திட்டமிட்டு இருக்கிறது. இது ஒடிசா மட்டுமல்லாது, இந்திய அளவில் வரலாற்றில் புதிய மைல்களாக இருக்கும் எனவும், பல்வேறு உலக நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான முதலீடுகளை ஒடிசா ஈர்க்கும் என கூறப்படுகிறது.
-
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications