"பாமாயில்".. சமையல் எண்ணெய் விலை குறையப்போகுது.. மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளதால் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் விலை என்பது குறைய உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இது நேரடியாக மக்களின் மீது சுமையை ஏற்படுத்தும். அந்த வகையில் சமையல் எண்ணெய் விலை என்பது 24 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

government-cuts-customs-duty-on-crude-edible-oils-from-20-percent-to-10-percent-to-lower-cooking-oil

இந்த விலை உயர்வால் நாடு முழுவதும் மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட உள்ளது. இந்நிலையில் தான் மக்களின் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் உள்ளிட்டவற்றின் மீதான சுங்க வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சமையல் எண்ணெய்களுக்கான சுங்கவரி 20 சதவீதமாக இருந்தது. தற்போது இது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமையல் எண்ணெய் விலை உயர்வை குறைக்க முடியும் என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் பாமாயில், சோயாபீன் எண்ணெய், சன்பிளவர் ஆயில் உள்ளிட்டவற்றின் மீதான வரி மற்றும் கட்டணம் 27.5 சதவீதமாக இருந்த நிலையில் இப்போது 16.5 சதவீதமாக குறையும். இருப்பினும் Refined ஆயில்களின் மீதான வரி, கட்டணம் 35.75 சதவீதமாக தொடர்கிறது.

இதுதொடர்பாக மத்திய உணவு பாதுகாப்பு துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில், ‛‛சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். இந்த வரி குறைப்பு நடவடிக்கை நேற்று முதல் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது.

நம் நாட்டை எடுத்து கொண்டால் மக்களுக்கான சமையல் எண்ணெயில் 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2024-24ம் ஆண்டில் ஆயில் மார்க்கெட்டிங் ஆண்டில் (நவம்பர் முதல் அக்டோபர்) நம்நாடு ரூ.1.32 லட்சம் கோடி கொடுத்து 159.6 லட்சம் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து செய்துள்ளது.

இதில் பாமாயிலை எடுத்து கொண்டால் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் இருந்தும், சோயாபீன் ஆயிலை எடுத்து கொண்டால் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் இருந்தும் நம் நாடு அதிகமாக இறக்குமதி செய்கிறது. தற்போது சுங்கவரியை குறைத்து இருப்பதன் மூலம் அதன் விலை குறைவதோடு, சில்லரை விலையில் வாங்கும் மக்களுக்கும் பணம் மிச்சமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+