அடிதூள்.. பெண்களுக்கு மாதம் ரூ. 20,000 ஊக்கத்தொகை.. வந்தது ஜாக்பாட் அறிவிப்பு.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: பெண்களுக்கான ஊக்கத்தொகைக்கு மத்திய அரசு, அபாரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது... இதைக்கேட்டு பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவிகள், பெண் ஆசிரியர்கள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு வழிவகை செய்து வருகிறது.. இதற்காகவே புதிய அறிவிப்பு ஒன்றையும் அறிவித்துள்ளது.
அதன்படி, 'மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பயிற்சித் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ அல்லது பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். டெல்லியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ள டெல்லி சென்று வருவதற்கான மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி ரயில் கட்டணங்கள் வழங்கப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் குறித்து இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது. இதில் சேர விரும்புவர்கள்
https://docs.google.com/forms/d/1UWK5W_07pRxL8yekBy6DbjAg2-25Vd_WJwfnc4nReTU/viewform?edit_requested=true என்ற இந்த ஆன்லைன் இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை 29.05.2023 இரவு மணி 11.59 க்குள் சமர்பிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இணைய முகவரி மூலம் தங்களின் விவரங்களை மே 29 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications