Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛களமிறங்கும் ரஃபேல்’.. இந்தியாவை சீண்டும் துருக்கிக்கு விழும் பெரிய அடி.. அலறவிடப்போகும் கிரீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: களமிறங்கும் ரஃபேல் விமானங்களால் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பதோடு, பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் துருக்கிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. துருக்கியை அண்டை நாடான கிரீஸ் கதறவிடப்போவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

துருக்கி.. நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள நாடு. முன்பு இருந்தே பாகிஸ்தான் உடன் துருக்கி நட்பாக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு உதவுவது, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐநா உள்பட பல இடங்களில் குரல் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை துருக்கி செய்து வருகிறது.

turkey greece rafale

அதோடு பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியாவுக்கு பாதுகாப்பு துறை சார்பில் ராணுவ தளவாடங்களை அனுப்புவதை ரத்து செய்வதாகவும், இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் துருக்கி கடந்த ஆண்டு முடிவு செய்தது. மேலும் பாகிஸ்தானில் 155 மில்லி மீட்டர் பீரங்கிகளை தயாரிக்கும் ஆலையை துருக்கி தொடங்க உள்ளது. பாகிஸ்தானில் வெடிப்பொருள் பாதுகாக்கும் வசதியையும் துருக்கியின் செய்யப்பட உள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இப்போது பாகிஸ்தானை போல் வங்கதேசத்தையும் துருக்கி அரவணைக்க தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் எப்படி நம்மை எதிர்க்க தொடங்கி உள்ளதோ அதேபோல் நம் நாட்டுக்கு எதிராக வங்கதேசம் கிளம்பி இருப்பது தான். கடந்த 9 ம் தேதி வங்கதேசம் சென்ற துருக்கி நாட்டின் வர்த்தக அமைச்சர் ஓமர் போலட், முகமது யூனுஸை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‛‛இந்தியாவை நம்ப வேண்டாம். வங்கதேசத்துக்கு உதவும் இந்தியாவின் ரோலை துருக்கி இனி செய்யும்'' என்று உறுதியளித்தார். வங்கதேசம் ஏற்கனவே துருக்கியின் பயக்டர் டிபி2 வகை ட்ரோனை பயன்படுத்தி இந்தியாவை மிரட்டி வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக துருக்கியிடம் இருந்து டப்ளர் லைட் டேங்குகளை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது. இது இந்தியாவுக்கு எல்லையில் சவாலாக இருக்கும்.

இப்படி தொடர்ந்து நம் நாட்டுக்கு எதிராக துருக்கி செயல்பட்டு வருகிறது. இதனை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை நம் நாடும் எடுத்து வருகிறது. இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நமக்கு குடைச்சல் தரும் துருக்கிக்கு ரஃபேல் விமானத்தால் பெரும் சிக்கல் என்பது ஏற்பட்டுள்ளது. இந்தியா ரஃபேல் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. அதேபோல் துருக்கியின் அண்டை நாடான கிரீசும் ரஃபேல் விமானங்களை விமானப்படையில் இணைத்துள்ளது. இதுதான் துருக்கிக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது.

அதாவது துருக்கியும், கிரீஸ் நாடும் அண்டை நாடுகளாக உள்ளனர். இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. ஆனாலும் கூட துருக்கி மத்திய கிழக்கு நாடாகவும், கிரீஸ் தென்கிழக்கு ஐரோப்பிய நாடாகவும் வகைப்படுத்தப்பட்டு வருகிறது. இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு என்பது இருந்து வருகிறது. ஏஜியன் கடல் தீவுகள் தொடர்பாக கிரீஸ் மற்றும் துருக்கி இடையே பிரச்சனை உள்ளது. இந்த தீவின் பெரும்பாலான பகுதி கிரீஸ் வசம் உள்ளது. ஆனால் ஒருசில இடங்கள் துருக்கி வசம் இருக்கிறது. இந்த பகுதி என்பது எண்ணெய்மற்றம் எரிவாயுவுக்கான முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் துருக்கி இந்த இடத்தை கைப்பற்ற முயன்றது. அன்று முதல் இருநாடுகள் இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. இன்று வரை மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தான் துருக்கியை சமாளிக்க கிரீஸ், பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை இறக்கி உள்ளது. 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஃபேல் போர் விமானங்கள் என்பது பிரான்ஸ் நாட்டின் தசால்ட் அவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பாகும். மொத்தம் 24 போர் விமானங்களை வாங்க கிரீஸ், பிரான்சிடம் ஒப்பந்தம் செய்தது. இதில் 12 விமானங்கள் பயன்படுத்தப்பட்ட விமானமாகும். 12 விமானங்கள் புதிய விமானங்களாகும். கடந்த 2021ம் ஆண்டில் கிரீஸ் நாட்டுக்கு முதல் ரஃபேல் விமானம் வழங்கப்பட்டது. இப்போது 24 விமானங்களும் கிரீஸ் நாட்டிடம் வழங்கப்பட்டுவிட்டது. கடைசி விமானம் என்பது கடந்த 9 ம்தேதி பிரான்சின் போர்டியாக்ஸ் நகரில் உள்ள தசால்ட் அவியேஷன் நிறுவனத்தில் இருந்து நேரடியாக கிரீஸ் நாட்டின் தனக்ரா விமான தளத்தில் வந்து இறங்கி உள்ளது.

இதன்மூலம் கிரீஸ் நாட்டின் விமானப்படை பலமாகி உள்ளது. ஏனென்றால் இந்த ரஃபேல் போர் விமானங்கள் 4.5 தலைமுறை விமானங்களாகும். நவீன வசதி கொண்டது. 24 ரஃபேல் விமானத்தில் 18 விமானங்கள் சிங்கிள் சீட் கொண்டவை. 6 விமானங்கள் டபுள் சீட் கொண்டவையாகும். இந்த விமானங்கள் 1.6 மாக் வேகத்தில் செல்லக்கூடியது. 50 ஆயிரம் அடிக்கு மேலே பறக்க முடியும். 24,500 கிலோ வரை சுமந்து செல்லும். அதோடு இந்த விமானத்தில் மீடியோர் ஏவுகணையை (Meteor Missiles) சுமந்து செல்ல முடியும்.

ஆனால் துருக்கி தற்போது 4ம் தலைமுறை விமானத்தை தான் பயன்படுத்தி வருகிறது. அந்த விமானத்தின் பெயர் லாக்ஹீட்மார்ட்டின் எஃப் 16. இந்த விமானத்தால் மீடியோர் ஏவுகணையை சுமந்து செல்ல முடியாது. துருக்கி தற்போது 5 மற்றும் 6ம் தலைமுறை விமானத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் சில விமானங்கள் தயாரிக்கப்பட்டு சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இன்னும் துருக்கி விமானப்படையில் 5 மற்றும் 6ம் தலைமுறை விமானங்கள் முழுவீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் ஏஜியன் தீவு விவகாரத்தில் மோதலை கடைப்பிடிக்கும் துருக்கிற்கு, கிரீஸ் ரஃபேல் போர் விமானங்கள் மூலம் பதிலடி கொடுக்க தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+