ஜிஎஸ்டியில் 12% & 28% வரி அடுக்குகள் நீக்கம்.. ஒப்புதல் அளித்த ஜிஎஸ்டி அமைச்சரவை குழு!
டெல்லி: ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மத்திய அரசும் 12% & 28% வரி அடுக்கை நீக்கப் பரிந்துரை அளித்திருந்தது. இதற்கிடையே இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்படும்..
இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை வந்த பிறகு இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

இப்போது நாட்டில் இப்போது 5%, 12%, 18%, மற்றும் 28% என 4 பிரிவுகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதுபோக அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
இருப்பினும் தற்போதுள்ள நடைமுறையில் பல பொருட்களுக்கு வரிகள் அதிகமாக இருப்பதால் அதைக் குறைக்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்றும் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சூழலில் தான் பிரதமர் மோடியும் தனது சுதந்திர தின உரையில் இது குறித்து ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து மத்திய அரசும் 12% & 28% வரி அடுக்கை நீக்கப் பரிந்துரை அளித்திருந்தது. இந்தப் பரிந்துரைக்கு ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்தகட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்படும். அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இது அங்கு முன்மொழியப்படும். அங்கும் இதற்கான ஒப்புதல் கிடைத்தால், இதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறையும்.












Click it and Unblock the Notifications